Posts

Showing posts from February, 2022

28.02.2022

"துக்ளக்" மரபைத் தோற்றுவித்தவர் யார்? கியாசுதீன் துக்ளக்

27.02.2022

"அலாவுதீன் கில்ஜி" ஆல் தோற்கடிக்கப்பட்ட தேவகிரியின் மன்னர் யார்? இராமசந்திரசேகர்

26.02.2022

"தைமூர்" ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம் எது? டில்லி

25.02.2022

நேருவின் சமாதி எங்கு உள்ளது? சாந்திவனம்

24.02.2022

மிக நீண்ட காலம் இந்தியப் பிரதமராக இருந்தவர் யார்? ஜவஹர்லால் நேரு விளக்கம்:: சவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 – மே 27,1964) இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்). இவர் பண்டிட் நேரு, பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார். இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகத்து 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார்.

23.02.2022

அமெரிக்க அதிபரின் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்? 4 ஆண்டுகள் விளக்கம்:: அமெரிக்க அதிபர் பதவி என்பது அமெரிக்காவில் முக்கியமாக மதிக்கப்படும் அதிக சக்தி படைத்த பதவி. தற்போது பாராக் ஒபாமா தான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக உள்ளார்.

22.02.2022

'மேய்ன் கேம் ஃ ப்' என்பது யாருடைய சுய சரிதம்? அடால்ஃ ஹிட்லர் விளக்கம்:: ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்தவர். எண்ணற்ற அப்பாவிகளை இன வெறியின் காரணமாக கொன்று குவித்தவர். இவரது இனவெறிக்கு சுமார் 6 பில்லியன் யூதர்கள் இறந்ததாக இங்கிலாந்தின் அப்போதைய  கணக்கெடுப்பு ஒன்று சொல்கிறது. இறுதியில் தோல்வி பயத்தின் காரணமாக தனது காதலியுடன் தற்கொலை செய்து கொண்டார்.

21.02.2022

அமெரிக்காவின் 16 ஆவது அதிபர் யார்? ஆபிரகாம் லிங்கன்

20.02.2022

ஜனநாயக முறைப்படி எதிர்ப்புகள் இன்றி (அதாவது கத்தி இன்றி ரத்தம் இன்றி) கம்யூனிச ஆட்சி முதன் முதலாக உலகில் எங்கு அமைக்கப்பட்டது? கேரளா

19.02.2022

'கம்யூனிசத்தின் தந்தை' என்று அழைக்கப்படுபவர் யார்? காரல் மார்க்ஸ் விளக்கம்:: "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்" என்று முழங்கியவர் காரல் மார்க்ஸ். வாழ்வின் பெரும் பகுதியை வறுமையில் கழித்தவர். தொழிலாள வர்க்கத்தை வாழ் நாளில் ஆதரித்தும், முதலாளி வர்க்கத்தை எதிர்த்தும் போராடியவர் இவர்.

18.02.2022

'மாசிடோனியா mad man" என்று உலக வரலாற்றில் அழைக்கப்பட்டவர் யார்? மகா அலெக்சாண்டர் விளக்கம்:: மகா அலெக்சாண்டர் கிரேக்க அரசர் இரண்டாம் பிலிப்பின் மகன். இவரது ஆசிரியர் அரிஸ்டாட்டில். தனது 30 ஆவது வயதில் ஏறக்குறைய பாதி உலகை வென்றவர்.

17.02.2022

சுதந்திர இந்தியாவுடன் எந்தப் பிரச்சனையும் செய்யாமல் முதலில் முன்வந்து இணைந்த சமஸ்தானம் எது? புதுக்கோட்டை விளக்கம்:: புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியா சுதந்திரம் அடைந்து அகண்ட பாரதம் உருவாகப் போவதை உணர்ந்து தானாக வந்து இந்தியாவுடன் தன்னை எவ்வித எதிர்ப்பும் இன்றி இணைத்துக் கொண்டது.  அந்த வகையில் ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான் தான் புதுக்கோட்டையின் கடைசி அரசர். இவருக்கு காந்தியுடன் நல்லுறவு இருந்தது. இவர் தான் 1948 மார்ச் மாதத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்பினை ஏற்று 1948 மார்சு 3 ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார்.

16.02.2022

இந்தியாவிற்கு சுதந்திரம் அறிவித்த பிறகு ராணுவ நடவடிக்கை மூலமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பெரிய சமஸ்தானம் எது? ஹைதராபாத் விளக்கம்:: ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைய மறுத்து தன்னிச்சையாக செயல் பட ஆரம்பத்தில் முடிவு எடுத்தது. அந்த சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க ராணுவ நடவடிக்கை மூலம் முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டார் சர்தார் வல்லபாய் பட்டேல். இவரே பிற்காலத்தில் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.

15.02.2022

"யங் இந்தியா" என்ற பத்திரிக்கையை சுதந்திர போராட்ட காலத்தில் நடத்தியவர் யார்? காந்தி விளக்கம்:: காந்தி இந்திய தேசத்தின் "தேசத் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். இவர் சுட்டுக் கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியை இன்றும் கூட நாம் தியாகிகள் தினமாக அனுஷ்டித்து வருகிறோம்.

14.02.2022

பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிலைநாட்டக் காரணமாக இருந்த போர் எது? முதலாம் பானிபெட் போர் விளக்கம்:: முதலாம் பானிபெட் போர் மூலம் தான் பாபர் இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார். அப்போரில் அவர் அதற்கு முன்னர் டில்லியை ஆண்ட இப்ராகிம் லோடியை தோற்கடித்துக் கொன்றார்.

13.02.2022

ரத்னாவளி என்ற நூலை எழுதியவர் யார்? ஹர்சர் விளக்கம்:: ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியா முழுதும் குப்த பேரரசு வீழ்ச்சிக்குப்பின் சிறு சிறு குடியாட்சிகளாகவும் குறுநில மன்னராட்சிகளாகவும் இருந்து வந்தது. இந்தக் குறுநில மன்னர்கள் கி.பி606 ஏப்ரலில் ஹர்ஷரை அவருடைய 16ஆவது வயதில் அரசராக முடிசூட்டினர். ஹர்ஷர் தனது பேரரசை மேற்கில் பஞ்சாப் முதல் கிழக்கில் வங்காளம் வரை விரிவு படுத்தினார்.  இவரே ரத்னாவளி என்னும் நூலை எழுதினார்.

12.02.2022

"இரத்தத்தை கொடுங்கள் சுதந்திரம் தருகிறேன்" என்று முழங்கியவர்? நேதாஜி விளக்கம்:: நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897– இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945)இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், உருசியாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது.

11.02.2022

விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைய முக்கியக் காரணம்? தலைக்கோட்டை போர் விளக்கம்:: தலிகோட்டா அல்லது தலைக்கோட்டை கர்நாடகாவின் பீஜப்பூரின் தென்கிழக்கே ஏறத்தாழ 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. விஜய நகரத்தின் தலைமை அச்சுத ராயரிடம் இருந்து ராமராயருக்கு மாறிய போது சுல்தான்கள் ஒன்றிணைந்து விஜயநகரத்தை வெல்ல நினைத்தனர். மேலும் சுல்தானகங்களுக்குள் நடந்த திருமணங்கள் அவர்களது உட்பூசல்களைத் தீர்த்தது. எனவே அவர்கள் ஒன்றிணைந்து தங்கள் பொது எதிரியான விசயநகரப் பேரரசை வென்றனர்.

10.02.2022

"சுதந்திரம் எனது பிறப்புரிமை அதனை அடைந்தே தீருவேன்" என்று முழங்கியவர் யார்? திலகர் விளக்கம்:: பால கங்காதர திலகர்  ஜூலை 23, 1856 –ஆகஸ்ட் 1, 1920 (அகவை 64), ஒரு இந்தியத் தேசியவாதியும், சமூக சீர்திருத்தவாதியும், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு.

09.02.2022

கௌதம புத்தர் முதன் முதலில் போதித்த இடம் எது? சாரநாத் விளக்கம்:: சாரநாத் (Sarnath) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசிக்கு 13 கிமீ வட-கிழக்கே அமைந்துள்ள ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க நகரம் ஆகும். இவ்வூரில் அமைந்துள்ள மான் பூங்காவிலேயே கௌதம புத்தர் தனது முதல் போதனையான தர்மம் என்பதைப் போதித்தார்.

08.02.2022

"வறுமையே வெளியேறு" என்று முழங்கியவர் யார்? இந்திரா காந்தி

07.02.2022

இந்தியா சுதந்திரம் பெறும்போது இங்கிலாந்து பிரதமாக இருந்தவர் யார்? கிளமென்ட் ரிச்சர்ட் அட்லி விளக்கம்:: இந்தியா சுதந்திரம் பெறும்போது இங்கிலாந்து பிரதமாக இருந்தவர் கிளமென்ட் ரிச்சர்ட் அட்லி.இவருக்கு முன் பிரதமராக இருந்த சர்ச்சில் இந்தியாவுக்கு சுதந்திரம் தரக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார்.  ஆனால் அட்லி இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அதனை வலியுறுத்தவும் செய்தார்.

06.02.2022

இந்திய சிவில் சர்வீஸின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? காரன் வாலிஸ் விளக்கம்:: திறமையான மற்றும் நேர்மையான பணியாளர்களை நியமித்து ஆட்சிப் பணித்துறையை செம்மைப்படுத்தியதே காரன்வாலிஸ் மேற்கொண்ட சீர்திருத்தங்களில் முதன்மையானதாகும். சிக்கனம் எளிமை தூய்மை ஆகியவற்றை அவர் தனது நோக்கங்களாகக் கொண்டிருந்தார்.

05.02.2022

அடிமை வம்சத்தின் முதல் அரசர் யார்? குத்புதின் ஐபெக் விளக்கம்:: முகம்மது கோரியால் விலைக்கு வாங்கப்பட்டவர் தான் குத்புதின் ஐபெக் இவரால் தோற்றுவிக்கப்பட்ட வம்சமே பிற்காலத்தில் அடிமை வம்சம் என்று அழைக்கப்பெற்றது.

04.02.2022

செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டுமானம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது? 1639 விளக்கம்:: புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George), இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாகும்.பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டத் தொடங்கப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.  இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும்.

03.02.2022

அக்பரின் பாதுகாவலர் யார்? பைரம் கான்

02.02.2022

ஆங்கிலேயர் இந்தியாவில் வணிகம் செய்ய அனுமதி தந்த முகலாய அரசர் யார்? ஜஹாங்கீர் விளக்கம்:: அக்பரின் மகனாக இருந்த ஜஹாங்கீர் அவரைப் போல் கண்ணியம் மிக்கவராக இல்லை. எப்போதும் மதுவுக்கும், மாதுவுக்கும் அடிமையாகிக் கிடந்தார். இவர் தான் ஆங்கிலேயர்களின் பரிசுப் பொருட்களுக்கு மயங்கி ஆங்கிலேயர் இந்தியாவில் வணிகம் செய்ய அனுமதி தந்தார்.

01.02.2022

பக்ஸார் போரில் பங்கேற்ற முகலாயப் பேரரசர் யார்? இரண்டாம் ஷா ஆலம் விளக்கம்:: பக்ஸார் போரில் பங்கேற்ற முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலம் ஆவார்.இவர் போரில் தோற்று பிரிட்டிஷ்  கிழக்கிந்திய நிறுவனத்தால் நாடு கடத்தப்பட்டார்.