156, 275, 187, 373, 671, 947, 1045, 594, 321, 819, 1232 ஆகிய இந்த வரிசையில் மொத்தம் எத்தனை எண்கள் 11 ஆல் வகுபடும்? 6 விளக்கம்:: 275, 187, 671, 1045, 594, 1232 ஆகிய இந்த எண்கள் அனைத்துமே 11 ஆல் வகுபடும். ஆக மேற்கண்ட வரிசையில் மொத்தம் இந்த 6 எண்கள் 11 ஆல் வகுபடக் கூடியவை ஆகும்.
X மற்றும் y இன் சராசரி மதிப்பு 30 எனக் கொள்க. அதே போல y மற்றும் z இன் சராசரி மதிப்பு 20 எனக் கொள்க, எனில் X - Z இன் மதிப்பு என்ன? 20 விளக்கம்:: (x +y)/2 = 30; x + y = 60 same wise (y+z)/2 = 20; y + z = 40; x - z = (x+y) - (y+z) = 20 ஆக X - Z இன் மதிப்பு 20 என அறிக.
2012 ஜூலை மாதம் 15 ஆம் தேதி ஞாயிறு என்று கொண்டால். இதன் படி 2008 15 ஆம் தேதி ஜூலை மாதம் என்ன தேதி இருந்திருக்கும்? செவ்வாய் விளக்கம்:: Number of odd days from 2009 to 2012 = 1+1+1+2 = 5. இதன் படி ஞாயிற்றுக் கிழமையில் 5 நாள் முன்னுக்கு சென்றால் வருவது செவ்வாய் கிழமை ஆகும்.
கொடுக்கப்பட்டு உள்ளவற்றில் ஆறால் வகுபடும் எண் எது.(i) 5647386 (ii) 8460398 (iii) 2385972 (i) மற்றும் (iii) மட்டும் விளக்கம்:: For a number to be divisible by 6, it must also be divisible by 2 and 3. Therefore, we need to check if a number is even and then check if the sum of the digits is divisible by 3.
1990 ஆம் வருடம் ஜூன் மாதத்திற்கும், 1993 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்திற்கும் இடையே மொத்தம் எத்தனை மாதங்கள் 31 நாட்களை கொண்டு இருக்கிறது? 19 விளக்கம்:: ஒரு வருடத்தில் 7 மாதங்கள் 31 நாட்களைக் கொண்டு இருக்கும். அதன் படி ஜூன் 90 முதல் பிப்ரவரி 93 இடையே (1990 - 4 மாதங்கள்) + (1991 -7 மாதங்கள்) + (1992 - 7 மாதங்கள்) + (1993 - ஒரு மாதம்) = மொத்தம் 19 மாதங்கள் 31 நாட்களை கொண்டு இருக்கிறது.
6, 11, 21, 36, 56, ... 81 விளக்கம்:: +5, +10, +15, + 20, +25 என்ற அடிப்படையில் இத்தொடர் முறையே அமைத்து உள்ளது. அந்த வகையில் அடுத்து வர வேண்டிய எண் 81 ஆகும்.
1943 முதல் 2011 வரையிலான வருடங்களில் எத்தனை வருடங்கள் லீப் வருடங்களாக இருந்திருக்கும்? 17 விளக்கம்:: 1943 முதல் 2011 வரையிலான வருடங்களில் லீப் வருடங்கள் என்று பார்த்தால் 44, 48, 52, 56, 60, 64, 68...2004, 2008 ஆக இப்படி முடியும் சமயத்தில் மொத்த லீப் வருடத்தின் எண்ணிக்கை 17 ஆகும்.
முதல் ஆறு பகா (Prime numbers) எண்களின் சராசரி மதிப்பெண் எவ்வளவு? 6.8 விளக்கம்:: முதல் ஆறு பகா எண்கள் 2,3,5,7,11,13 அவைகளின் சராசரி மதிப்பெண் = (2+3+5+7+11+13)/6 = 41/6 = 6.833.
ஐந்து தொடர்ச்சியான ஒற்றைப் படை எண்களின் (odd numbers) சராசரி (average) மதிப்பு 25 எனில் அதில் மிகச் சிறிய எண்ணை கண்டு பிடியுங்கள்? 21 விளக்கம்:: ஐந்து தொடர்ச்சியான ஒற்றைப் படை எண்களை இவ்வாறு எடுத்து எழுதுக (x,x+2,x+4,x+6 and x+8). மேற்கண்ட ஐந்து எண்களின் சராசரி மதிப்பு = (5x +20)/5 = 25, எனில் x = 21. ஆக 21 தான் மிகச் சிறிய எண் எனக் காண்க.
ஒரு குடும்பத்தில் இருந்த மூன்று உறுப்பினர்களின் வயது விகிதம் 3:5:7. இவர்கள் அனைவரின் கூட்டு வயதும் 5 வருடங்களுக்கு முன்னாள் 60 எனில், இதில் இளைய குடும்ப உறுப்பினரின் வயது தான் என்ன? 15 விளக்கம்:: இவர்களின் தற்போதைய வயது 3X, 5X மற்றும் 7X; 5 வருடத்திற்கு முன்னாள் இவர்களின் கூட்டு வயது = 3X-5+5X-5+7X-5= 15x-15=60, இந்த சமன்பாட்டிற்கு தீர்வு கண்டால் X = 5, அந்த வகையில் இளைய குடும்ப உறுப்பினரின் வயது = 3x = 15 ஆகும்.
12 (21) 9 எனில் 5 (?) 10 விடை அறிக. 15 விளக்கம்:: முதல் வரிசையில் அடைப்புக் குறிகள் காணப்படும் எண் வெளியே உள்ள இரு எண்களையும் கூட்டுவதால் பெறப்பட்டது. இதே முறையில் இதற்கு அடுத்த வரிசையில் அடைப்புக்குள் வர வேண்டிய எண் 5 + 10 = 15 ஆகும். எனவே, இந்தப் 15 ஐ வினா குறியீடப்பட்ட இடத்தில் எழுதவும்.
1, 9, 17, 33, 49, 73 ... அடுத்து வர வேண்டிய எண் எது? 97 விளக்கம்:: + 8, + 8, + 16, + 24 ... என்ற விதத்தில் தொடர் அமைந்து இருப்பதை நாம் இதில் காணலாம். அந்த வகையில் அடுத்து வர வேண்டிய எண் 97 ஆகும்.
7, 10, 8, 11, 9, 12 ... 10 விளக்கம்:: முதலில் ஏழுடன் மூன்று கூட்டப்படுகிறது. அதனால் பத்து கிடைக்கிறது. பத்துடன் இரண்டு கழிக்கப்படுகிறது அதனால் எட்டு கிடைக்கிறது. இப்படியே தொடர் முழுவதும் நடப்பதை நாம் பார்க்கலாம். இதன் படிப் பார்த்தால் 12 க்கு அடுத்தபடியாக கிடைக்கவேண்டிய எண் பத்தாகும்.
10, 15, 5, 6, 20 இதில் உள்ள எண்களில் ஒரே ஒரு எண் மட்டும் வேறு பட்டு உள்ளது. அது எந்த எண்? 6 விளக்கம்:: மேற்கண்ட வற்றில் ஆறாம் எண்ணை தவிர்த்து ஏனைய எண்கள் 5 ஆல் பிரிபடக் கூடியவை. எனவே இதில் ஆறு மட்டும் வேறுபட்டு உள்ளது.
இரு ரயில் வண்டிகளின் வேக விகிதம் 7:8 என்று கொள்க. எனில் அந்த இரண்டு இரயில் வண்டிகளில் இரண்டாவது ரயில் வண்டி நான்கு மணி நேரத்தில் 440 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது என்றால் முதல் ரயிலின் வேகம் எவ்வளவு? 96.25 km/hr விளக்கம்:: இரண்டு ரயில்களின் வேகம் 7X மற்றும் 8X km/hr என்றால் 8X = (440/4) = 110, X = (110/8) = 13.75 அதன் படி முதல் ரயிலின் வேகம் = (7x13.75) Km/hr = 96.25 km/hr.
1, 4, 9, 16, 25 ... அடுத்து வர வேண்டிய எண் எது? 36 விளக்கம்:: 1 X1, 2X2, 3X3, 4X4, 5X5 என்ற விதத்தில் தொடர் வருவதை நாம் பார்க்கலாம். அந்த வகையில் அடுத்து வர வேண்டிய எண் 36 ஆகும்.
கொடுக்கப்பட்டு உள்ள எண் தொடரைக் கவனமாகப் பார்க்கவும் அவை அனைத்தும் ஒழுங்கு முறையில் அமைந்து உள்ளது. இந்த ஒழுங்கு முறையை கவனித்து அதில் அடுத்து வர வேண்டிய எண்ணை கண்டுபிடிக்கவும். 1, 3, 5, 7, 9, 11.... 13