பெயருக்கு முன்னாள் இனிஷியல் போடும் வழக்கத்தை கண்டு பிடித்தவர்கள் யார்? ஆங்கிலேயர்கள் விளக்கம்:: பெயருக்கு முன்னாள் இனிஷியல் போடும் வழக்கத்தை முதன் முதலில் கண்டு பிடித்தவர்கள் ஆங்கிலேயர்கள் தான்.
வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவின் பரப்பளவு எத்தனை? 510 ஹெக்டேர் விளக்கம்:: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தமிழ்நாட்டின் சென்னையின் தெற்கில் 30 கீ.மீ தொலைவில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது. இப்பூங்கா வண்டலூர் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இப்பூங்கா 1855ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாகும். இங்கு 170க்கும் மேற்ப்பட்ட பாலுட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளன. இது பரப்பளவில் சுமார் 510 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது.
மனித உடலின் தொட்டி என்று வர்ணிக்கப்படும் உள்ளுறுப்பு எது? சிறுநீரகம் விளக்கம்:: சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும். இதுவே மனித உடலின் தொட்டி என்று அழைக்கப்படுகிறது.
இங்கிலாந்தில் கவுரவிக்கப்பட்ட முதல் இந்தியக் கவிஞர் யார்? ரவீந்திரநாத் தாகூர் விளக்கம்:: இரவீந்தரநாத் தாகூர் புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. இவர் தான் இங்கிலாந்தில் கவுரவிக்கப்பட்ட முதல் இந்தியக் கவிஞர் ஆவார்.
ராமேஸ்வரத்தையும் மண்டபத்தையும் இணைக்கும் பாம்பன் பாலத்தின் நீளம் எவ்வளவு? 2.4 கிலோ மீட்டர் விளக்கம்:: பாம்பன் பாலம் (Pamban Bridge) பாக்கு நீரிணையில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரு கொடுங்கைப் பாலம். இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். இது சுமார் 2.மீ. நீளம் கொண்ட இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் (முதலில்பாந்திரா-வொர்லி கடற்பாலம்) ஆகும்.
பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதியின் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்? 7 ஆண்டுகள் விளக்கம்:: விமானங்களை உருவாக்குவதில் சிறந்து விளங்கும் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியின் பதவிக் காலம் 7 ஆண்டுகள் ஆகும்.
நோபல் பரிசு ஆண்டு தோறும் எத்தனை நபர்களுக்கு வழங்கப்படுகிறது? 6 நபர்கள் விளக்கம்:: பல துறைகளில் சாதனை படைத்த அறிஞர்களுக்கு வழங்கப்படும் பரிசு தான் நோபல் பரிசாகும். இந்தப் பரிசு ஆண்டு தோறும் 6 நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
இரும்புத் தாது அதிகமாக கிடைக்கும் இந்திய மாநிலம் எது? ஜார்கண்டு விளக்கம்:: இரும்புத் தாது அதிகமாக கிடைக்கும் இந்திய மாநிலம் ஜார்கண்டு தான். அதாவது நாட்டின் ஒட்டுமொத்த இரும்புத் தாது உற்பத்தியில், ஒடிசா, சட்டீஸ்கர், ஜார்கண்டு ஆகிய மாநிலங்கள், முன்னணியில் உள்ளன.
உலகில் பிறப்பு விகிதமே இல்லாத நாடு எது? வாட்டிகன் நகரம் விளக்கம்:: "வாட்டிகன் " என்ற சொல்லுக்கு கடவுளிடமிருந்து வரும் வாழ்த்துச் செய்தியினைப் பரப்பும் இடம் என்பது பொருளாகும். இதுவே உலகில் பிறப்பு விகிதம் இல்லாத நாடாகும்.
கடல்களின் எஜமானி என்று அழைக்கப்படும் நாடு எது? இங்கிலாந்து விளக்கம்:: இங்கிலாந்து தான் கடல்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இன்று வரையில் கப்பற் படையிலும் சிறந்து விளங்குகிறது.
யூத இனத்தை தோற்றுவித்தவர் யார்? ஆப்ரகாம் விளக்கம்:: ஆப்ரகாம் தான் முதன் முதலில் யூத இனத்தை தோற்றுவித்தவர் ஆவார். இஸ்லாம், யூத, கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள் அனைவருமே ஆபிரகாமை ஒரு இறை அடியவராகப் பார்கின்றனர்.
நமது நாட்டின் தேசிய கீதம் எந்த மொழியில் எழுதப்பட்டது? வங்காள மொழி விளக்கம்:: சன கண மன... இந்திய நாட்டுப்பண் ஆகும். இப்பாடல் வங்காள மொழியில் இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 விநாடிகள் ஆகும்.
தமிழகத்தின் முதல் காற்றாலை மின் நிலையம் எங்கே இருக்கிறது? முல்லைக் காடு விளக்கம்:: காற்றாலை மின்உற்பத்தி இயந்திரம் என்பது காற்று சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சிறு மின் நிலையம் ஆகும். இதில் 30 மீட்டர் உயரம் உள்ள இரும்பிலான கோபுரத்தின் உச்சியில் காற்று மின் உற்பத்தி இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும். அந்தவகையில் தமிழகத்தின் முதல் காற்றாலை மின் நிலையம் முல்லைக் காட்டில் அமைக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் நாடு எது? சுவிட்சர்லாந்து விளக்கம்:: ஒவ்வொரு ஆண்டும் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் நாடு சுவிட்சர்லாந்து ஆகும்.
இந்தியாவில் உப்பு ஏரிகள் அதிகம் உள்ள மாநிலம் எது? குஜராத் விளக்கம்:: பெரிய உப்பு ஏரி (Great Salt Lake) அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் அமைந்த உப்பு ஏரி ஆகும்.அதே போல இந்தியாவில் உப்பு ஏரிகள் அதிகம் உள்ள மாநிலம் குஜராத் ஆகும்.
உலகில் யானைகளுக்காக உருவான முதல் பிரத்யேக மருத்துவமனை இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்து உள்ளது? கேரளா விளக்கம்:: உலகில் யானைகளுக்காக உருவான முதல் பிரத்யேக மருத்துவமனை இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் அமைந்து உள்ளது.
உலகின் முதல் அனைத்துலக குத்துச் சண்டை போட்டி எந்த ஆண்டு நடைபெற்றது? 1773 விளக்கம்:: உலகின் முதல் அனைத்துலக குத்துச் சண்டை போட்டி 1773 இல் தான் நடந்தது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எப்போது கட்டப்பட்டது? 1873 விளக்கம்:: சென்னை மத்திய தொடருந்து நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களுள் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆங்கிலேயர்களால் 1873 இல் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பழமையான கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.