Posts

Showing posts from January, 2021

01.02.2021

கராத்தே கற்றுக் கொள்பவர்களுக்கு முதன் முதலில் வழங்கப்படும் பெல்டின் நிறம் என்ன? வெள்ளை

31.01.2021

வால்ட் டிஸ்னி உருவாக்கிய கார்ட்டூன் கதா பாத்திரங்களில் கூ ஃ பி என்ற கதாபாத்திரம் எந்த உயிரினத்தை குறிக்கிறது? நாய்

30.01.2021

இந்தியா டுடே தமிழ்ப் பத்திரிகையின் முதல் ஆசிரியர் யார்? திரு. மாலன்

29.01.2021

அந்தமான் தீவுகளில் உள்ள சிறையின் பெயர் என்ன? செல்லுலர் ஜெயில்

28.01.2021

சுதந்திர தேவியின் கிரிடத்தில் எத்தனை ஜன்னல்கள் உள்ளன? இருபத்தி ஐந்து

27.01.2021

ஆசியாவிலேயே மிகப் பெரிய ரோஜாத் தோட்டம் எந்த நாட்டில் அமைந்து உள்ளது? இந்தியா விளக்கம்:: ஆசியாவிலேயே மிகப் பெரிய ரோஜாத் தோட்டம் இந்தியாவில் உள்ள சண்டிகார் இல் உள்ளது.

26.01.2021

மிகக் குறைந்த எழுத்துக்களைக் கொண்ட மொழி எது? ஹவாய் மொழி விளக்கம்:: ஹவாய் மொழி ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் மக்கள் பேசும் மலாய-பொலினீசிய மொழியாகும். ஹவாய் மாநிலத்தில் இம்மொழியும் ஆங்கிலமும் ஆட்சி மொழி ஆகும். மிகக் குறைந்த எழுத்துக்களைக் கொண்ட மொழி என்று இதனைச் சொல்லலாம்.

25.01.2021

பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு எது? இஸ்ரேல்

24.01.2021

பிஸ்கட் என்பது எந்த மொழியின் வார்த்தை? பிரஞ்சு

23.01.2021

வள்ளலார் பிறந்த ஊர் எது? மருதூர்

22.01.2021

சாஞ்சி ஸ்தூபி' எந்த மாநிலத்தில் உள்ளது? மத்தியப் பிரதேசம்

21.01.2021

உலகில் தபால் நிலையங்கள் எந்த நாட்டில் அதிகமாக உள்ளன? இந்தியா

20.01.2021

உலகின் பழமையான சிறைச்சாலை எங்கு அமைந்து உள்ளது? ஏதென்ஸ் விளக்கம்:: சிறைச்சாலை (Prison) என்பது குற்றம் சுமத்தப்பட்டவரையும் குற்றவாளிகளையும் அடைத்து வைக்கும் இடமாகும். இங்கு அரசு சட்ட விதிகளின்படி இவர்கள் தடுத்து வைக்கப்படுவர். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவ உதவி, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். குற்றவாளிகள் தங்களது குற்றத்திற்கான தண்டனையாக சமூகத்திலிருந்து பிரித்து வைக்கும் நோக்குடன் இங்கு தடுத்து வைக்கப்படுவர்.  சமூகத்தில் குற்றவாளிக்கு உள்ள அந்தஸ்தைப் பொருத்து, சட்ட விதிகளுக்கு உட்பட்டு தேவையான வசதிகள் வழங்கப்படும். அனுமதியின் பேரிலும், நிர்ணயிக்கப்பட்ட நாட்களிலும் சிறைச்சாலையிலுள்ள கைதிகளை அவர்களின் உறவினர்கள் சந்திக்கலாம். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் சிறப்பு அனுமதியின் பேரில் குறுகிய காலத்திற்கு வெளியே வரலாம்.  உலகத்தில் எண்ணற்ற சிறைச்சாலைகள் காணப்பட்டாலும் அவற்றுள் மிகப் பழமையான சிறைச்சாலை என்று பார்த்தால் அது ஏதென்ஸ் நகரத்தில் உள்ள சிறைச்சாலை தான்.

19.01.2021

உன்னையே நீ அறிந்துகொள்' என்று சொன்னவர் யார்? சாக்ரடிஸ் விளக்கம்:: சாக்கிரட்டீசு (கிமு 470 – கிமு 399) ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். இவர் மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவர். இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர், சாக்ரடீஸ் தான். உன்னையே நீ அறிந்துகொள்' என்று சொன்னவரும் இவரே ஆவார்.

18.01.2021

உத்திர பிரதேச மாநில நகரான அலிகார் எதற்கு மிகவும் பெயர் பெற்றது? பூட்டுத் தயாரிப்பில்

17.01.2021

ஓவியர் பிக்காஸோ எந்த நாட்டை சேர்ந்தவர்? ஸ்பெயின்

16.01.2021

இந்தியாவின் சைக்கிள் நகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது? லூதியானா விளக்கம்:: லூதியானா இந்திய நட்டிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் மிகப் பெரிய நகரமாகும். இந்நகரம் சட்லெஜ் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது வட இந்தியாவில் ஒரு முக்கியமான தொழில் மையமாகும். இதுவே 'இந்தியாவின் சைக்கிள் நகரம்' என்று அழைக்கப்படுகிறது.  காரணம் இந்த நகரத்தின் பெரும்பான்மையான மக்கள் போக்குவரத்துக்கு என்று சைக்கிளை தான் அதிகம்  பயன்படுத்துகின்றனர்.

15.01.2021

நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது? ராஜஸ்தான் விளக்கம்:: நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் ராஜஸ்தான் மாநிலத்தில் வெட்டப்பட்டது. இது மொத்தம் 445 கிலோ மீட்டர் நீளமானது. சட்லஜ், பீஸ் ஆகிய நதிகளில் இருந்து நீரை எடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் நீர் பாசனத்திற்கு என்று பயன்படுத்தவே இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதனால் ராஜஸ்தானின் ஏழு மாவட்டங்கள் பயன் அடைகின்றன.

14.01.2021

தீவிரவாதிகளைக் கண்காணிக்கும் போலீஸ் பிரிவிற்கு என்ன பெயர்? கியூ - பிரான்ச் விளக்கம்:: தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும். இதில் கியூ - பிரான்ச் என்பது தீவிரவாதிகளை கண்காணிக்கும் ரகசியப் பிரிவு என்று அறியப்படுகிறது.

13.01.2021

ஜலதரங்கத்தில் குறைந்தது எத்தனை கோப்பைகள் இருக்கும்? 16 கோப்பைகள் விளக்கம்:: ஜலதரங்கம் என்பது ஒரு இந்திய தாள இசைக்கருவி ஆகும். நீரால் நிரப்பப்பட்ட பீங்கான் கிண்ணங்கள் இசைக்கலைஞரை சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இக்கிண்ணங்களின் விளிம்புகளை தனது கைகளிலுள்ள குச்சிகளால் தட்டி அக்கலைஞர் ஒலி எழுப்புவார். நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை என இந்த இசைக்கருவி தமிழில் அழைக்கப்படுகிறது.  ஜலதரங்கத்தில் 16 கோப்பைகள் குறைந்தது இருக்கும்.

12.01.2021

நெருப்புக் கோழி ஓட்டப்பந்தயம் எந்த நாட்டில் நடத்தப்படுகிறது? தென் ஆப்பிரிக்கா

11.01.2021

உலகில் எந்த நாடு டெலிபோன் டைரெக்டரியை வெளியிடவில்லை? பிரான்சு விளக்கம்:: தொலைப்பேசி புத்தகம் அல்லது தொலைப்பேசி முகவரி புத்தகம் என்பது அனைத்து தொலைப்பேசி வைத்திருப்போரின் பெயர் மற்றும் தொலைப்பேசி எண்ணுடன் கூடிய பிரத்யேக புத்தகம் ஆகும். உலகத்தில் பிரான்ஸ் நாட்டை தவிர எல்லா நாடுகளுமே தொலைப்பேசி டைரெக்டரியை வைத்து உள்ளது.

10.01.2021

கல்பனா சாவ்லா சென்ற அமெரிக்க விண்கலத்தின் பெயர் என்ன? கொலம்பியா விளக்கம்:: கல்பனா சாவ்லா(Kalpana Chawla, ஜூலை 1, 1961 - பெப்ரவரி 1, 2003). இந்தியாவின் பஞ்சாபில் பிறந்த அமெரிக்கர் ஆவார். விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு. பிப்ரவரி 1, 2003 இல் ஏழு வீரர்களுடன் STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது விண்கலம் வெடித்து உயிரிழந்தார்.

09.01.2021

மாநிலங்களில் சுயாட்சி ஏற்பட்டது எந்த ஆண்டில்? 1935 ஆம் ஆண்டு விளக்கம்:: சுயாட்சிக் கட்சி (Swaraj Party) அல்லது சுவராஜ் கட்சி அல்லது சுவராஜ்ய கட்சி, சுயராஜ்ய கட்சி என்பது 1922-35 காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்ட ஓர் அரசியல் கட்சி. இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து உருவான இது காலப்போக்கில் காங்கிரசுடன் சேர்ந்து பணியாற்றத் தொடங்கியது. காங்கிரசின் தேர்தல் அரசியல் பிரிவாக செயல்பட்டு சில ஆண்டுகளுக்குப் பின்னர் அதனுடன் இணைந்துவிட்டது. எனினும், மாநிலங்களில் சுயாட்சி ஏற்பட்டது 1935 ஆம் ஆண்டில் தான்.

08.01.2021

ஒரு சிப்பிக்குள் முத்து விளைய, எத்தனை ஆண்டுகள் ஆகும்? 15 ஆண்டுகள் விளக்கம்:: கடலுக்குள் ஓடுகள் பெற்றுள்ள உயிரினங்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. இவற்றில் ஒன்றுதான் முத்துசிப்பி. சிப்பிகளிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன.5 செ.மீ., முதல் ஒரு மீட்டர் வரை வளரக்கூடியவை.  சிப்பிகளின் ஓடு இரு பகுதிகளானது. இரு பகுதிகளும் ஓரத்தில் ஓரிடத்தில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அதன் ஓடுகள் திறந்தே இருக்கும்.  நீரில் இருக்கும் ஆக்சிஜனை கிரகிக்கிறது சிப்பி. அதன் பருவ காலத்தில் கோடிக்கணக்கான முட்டைகளை இட்டுத் தள்ளும்.முட்டையை விட்டு வெளியே வரும்போது சிப்பிக்கு ஓடு இருக்காது.  அப்போது அதன் உருவம் ஒரு ஊசி முனை அளவே இருக்கும். ஒரு நாள் கழித்தே அதற்கு ஓடு உண்டாகிறது.இரண்டு வாரங்களில் நீந்த தொடங்கும்.  ஐந்து ஆண்டுகளில் முழு வளர்ச்சி அடையும். மிக நல்ல முத்துக்கள் பாரசீக வளைகுடாவில் தான் கிடைக்கிறது. அரேபியர்கள் கடலில் மூழ்கி முத்து குளிப்பதையே முக்கிய தொழிலாக கொண்டிருக்கின்றனர்.  சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களிலும் முத்துக்கள் கிடைக்கின்றன. ஒரு சி...

07.01.2021

ஒரு மைல் என்பது எத்தனை கி.மீ. தூரத்தைக் கொண்டது? 1.6 கி.மீ விளக்கம்:: பிரித்தானிய அளவை முறையில் நீண்ட தூரங்களை அளக்கப் பயன்படும் நீள அலகு மைல் ஆகும். மெட்ரிக் முறையில் இது அண்ணளவாக 1.6 கிலோமீட்டருக்குச் சமமானது ஆகும்.பண்டைய அரபிகளும் தூரத்தை அளக்க மைல் என்பதைப் பயன்படுத்தினார்கள்.  இது பிரித்தானிய அளவை முறைக்கு மிகவும் முற்பட்டதாகும். முகம்மது நபியவர்களின் காலத்திலும் அதற்கு முன்னரும் இது பயன்பாட்டிலிருந்தது. ”அரபு மைல்” என்று தற்கால வரலாற்றாளர்களால் அழைக்கப்படும் இந்த அலகு 1900 முதல் 2000 மீட்டருக்கு சம்மானதாக இருந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

06.01.2021

திருமணத்தின் சமயத்தில் கூட தேசிய கீதம் பாடும் நாடு எது? நைஜீரியா

05.01.2021

கதர் என்பது எந்த மொழிச் சொல்? அரபு விளக்கம்:: கைராட்டை நூலால் செய்த ஆடை தான் கதர் என்று அழைக்கப்படுகிறது. கதர் என்பது அரபு மொழிச் சொல் ஆகும்.

04.01.2021

கேள்விக் குறி முதன் முதலாக எந்த மொழியில் பயன்படுத்தப்பட்டது? லத்தீன்

03.01.2021

தஞ்சாவூர் ஓவியம் எதில் வரையப்பட்டது? கண்ணாடி

02.01.2021

சம்பா நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்த நடனம்? ராஜஸ்தான்