Posts

Showing posts from November, 2020

01.12.2020

நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு எது? நார்வே

30.11.2020

கிர் சரணாலயம் எங்குள்ளது? குஜராத்

29.11.2020

ஒரு தடவை கூட லோக் சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்? சரண்சிங்

28.11.2020

எந்த நாட்டின் கொடி இந்திய தேசியக் கொடியை போன்று இருக்கும்? ஹங்கேரி

27.11.2020

பூமி மணிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் தன்னைத் தானே சுற்றிக்கொள்கிறது? 1600 கிலோமீட்டர்

26.11.2020

உலகிலேயே மிகவும் குட்டையான மரங்கள் எங்கு காணப்படுகின்றன? கிரீன்லாந்து விளக்கம்:: உலகிலேயே குட்டையான மரங்கள் என கருதப்படும் (வில்லே மரங்கள்) கிரீன்லாந்தின் டுண்டுரா என்னும் பகுதியில் உள்ளது. இத்த வகை மரங்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் இரண்டு அங்குல உயரத்திற்கு மேல் வளராது.

25.11.2020

விமான விபத்தைக் கண்டறிய பயன்படும் 'கறுப்புப் பெட்டி' யின் உண்மையான நிறம் என்ன? ஆரஞ்சு விளக்கம்:: உண்மையில் அது கறுப்பு நிற பெட்டியல்ல. இடிபாடு மற்றும் சேதத்திற்கு இடையே எளிதாக கண்டுபிடிக்க ஆரஞ்சு அல்லது சிவப்பு நிற வண்ணத்தை இதன் மீது பூசுகிறார்கள். சுமார் 11000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக்கூட 30 நிமிடங்கள் வரை தாங்கும் தன்மையுடையது இந்த கறுப்புப் பெட்டி.

24.11.2020

நட்சத்திரம் ஒன்றின் ஆயுட்காலம் எவ்வளவு? பல நூறு கோடி ஆண்டுகள் விளக்கம்:: நட்சத்திரம் ஒன்றின் ஆயுட்காலம் பல நூறு கோடி ஆண்டுகள் ஆகும். நட்ச்சத்திரக் கூட்டங்களுக்கு இடையே உள்ள காலி இடங்களில் வாயுவும், தூசு போன்ற பொருட்களும் காணப்படுகிறது. 

23.11.2020

எறும்பு ஒரு வருடத்தில் எவ்வளவு முட்டைகளை இடும்? 10 மில்லியன் விளக்கம்:: ஒரு எறும்பு வருடத்தில் 10 மில்லியன் முட்டைகளை இடும். தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும் இருபது நாட்கள் வரை உயிருடன் வாழும் தன்மையுடையது எறும்புகள்.

22.11.2020

மனிதர்களின் செவி எவ்வளவு டெசிபெல் வரை தாங்கும் சக்தியுடையது? 80 முதல் 90 டெசிபெல் வரை விளக்கம்:: மனிதனுக்கு அதிகமாக ஒலியை தாங்கும் சக்தி கிடையாது. ஆகையால் மனிதர்கள் 90டெசிபெல் மேல் உள்ள ஒலியை கேட்க நேருமானால் அவர்களின் கேட்கும் சக்தி பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

21.11.2020

ஒலி (சத்தம்) கீழ்கண்ட என்ன அளவினால் அளக்கப்படுகிறது? டெசிபெல் விளக்கம்:: ஒலி டெசிபெல் என்ற அலகினால் அளக்கப்படுகிறது. பொதுவாக மனிதர்களின் உரையாடல் 40 டெசிபெல் என்ற அளவிலும், வாகனங்களின் ஆரன் மூலம் எழுப்பும் ஒலி 90 முதல் 100 டெசிபெல் வரையும் இருக்கலாம்.

20.11.2020

வேதியல் முறையில் தண்ணீர் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? கேவண்டிஸ் விளக்கம்:: 1784 ஆம் ஆண்டு 'கேவண்டிஷ் ' என்ற அறிவியல் அறிஞரால் ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் 1:8 என்ற எடை விகிதத்தில் கலந்தால் நீர் உண்டாகிறது என கண்டறியப்பட்டது. நீரை மென்னீர், கடினநீர் என இரு வகையாக பிரிக்கலாம்.

19.11.2020

உலகின் மிகப்பெரிய தண்ணீர் ஜாடி எங்கு உள்ளது? ஜெய்ப்பூர் விளக்கம்:: 16 மீட்டர் உயரம் உள்ள மிகப்பெரிய  இரு சில்வர் ஜக்குகள் தற்பொழுது ஜெய்ப்பூர் அரண்மனையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றிலும் சுமார் 8 ஆயிரத்து 182 லிட்டர் தண்ணீரை சேர்த்து வைக்க முடியும்.

18.11.2020

தொட்டாற்சிணுங்கியின் தாவரவியல் பெயர் என்ன? மிமோசா புடிகா விளக்கம்:: இச்செடியின் இலைகளை தொடும் பொழுது, அதன் கீழ்ப்பகுதி உயிரணுக்களில் உள்ள திரவத்தன்மை நீங்கி விடுகிறது. ஆனால் மேற்பகுதி அணுக்களில் உள்ள திரவத்தன்மை நீங்குவது இல்லை. மேற்பகுதி இலையின் எடை காரணமாக முழு இலையும் நெகிழ்ந்து வளைந்து கீழே தொங்கிவிடுகிறது.

17.11.2020

மஞ்சள் காமாலை நோய் எவற்றின் மூலம் பரவுகிறது? கொசு

16.11.2020

சந்திரனின் அளவு பூமியின் அளவில் எவ்வளவு பங்கு உள்ளது? கால் பங்கு

15.11.2020

ஒரு வினாடிக்கு ஆயிரம் முறை சிறகடிக்கும் பூச்சி எது? மிட்ஸ் பறவை விளக்கம்:: பாடும் பறவையின் சிறகுகள் ஒரு வினாடிக்கு 100 முறைகள் சிறகடிக்கும். ஆனால் மிட்ஸ் எனப்படும் பறவை வகை ஒரு வினாடிக்கு ஆயிரம் முறைகள் அடித்துக்கொள்ளும் திறன் வாய்ந்தவை.

14.11.2020

அதிவேகத்தில் பூமியில் துளையிட்டு செல்லும் திறன் வாய்ந்த உயிரினம் எது? மூஞ்சூறு எலி விளக்கம்:: சுமார் 8 மணி நேரத்தில் 100 மீட்டர் தூரம் பூமியில் துளையிட்டு செல்லும் திறன் வாய்ந்தது மூஞ்சூறு எனும் எலி.

13.11.2020

மரங்களில் வேகமாக வளரக்கூடிய மரம் எது? மூங்கில் விளக்கம்:: 24 மணி நேரத்தில் ஒரு மீட்டர் உயரத்திற்கு வளரும் தன்மை உடையது மூங்கில் மரங்கள்.

12.11.2020

பூதான் இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்? வினோபா பாவே விளக்கம்:: வினோபா பாவே (Vinoba Bhave, விநாயக் நரகரி பாவே, செப்டம்பர் 11, 1895 - நவம்பர் 15, 1982) ஒரு இந்திய அறப்போராளி, மனித உரிமைகள் ஆதரவாளர். இவர் மண் கொடை இயக்கத்துக்காக மிகவும் அறியப்படுகிறார். இவரே காந்தியின் ஆன்மீக வாரிசாக கருதப்படுபவர்.

11.11.2020

நோய் தடுப்பு தத்துவத்தை உருவாக்கியவர் யார்? எட்வர்ட் ஜென்னர் விளக்கம்:: எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner மே 17, 1749 - ஜனவரி 26, 1823), இங்கிலாந்து நாட்டு மருத்துவரும் அறிவியலாளரும் ஆவார். பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததற்காக ஜென்னர் அறியப்படுகிறார். இவர் நோயெதிர்ப்பு முறையின் தந்தை என சிறப்பு பெற்றார்.

10.11.2020

அமைதிப் பணிக்காக இந்தியா வழங்கும் விருதின் பெயர் என்ன? இந்திரா விருது விளக்கம்:: நாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது இந்திய தேசிய காங்கிரசு கட்சியினால் 1985ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் விருதாகும். இது நாட்டின் ஒற்றுமைக்காகவும் இந்தியாவின் பல்வேறு சமய,மொழி,சாதி மற்றும் குமுகக்குழுக்களிடையே புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும் தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.

09.11.2020

தஞ்சை சரசுவதி நூலகம் எந்த ஆண்டு கட்டப்பட்டது? 1824 விளக்கம்:: தஞ்சை சரசுவதிமகால் நூலகம் உலகில் உள்ள தொன்னூலகங்களில் ஒன்றாக சிறப்பாகக் கருதப்படுகின்றது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி. 1400 களிலே) இருந்த சோழர்கள் காலத்தில் தோன்றி, அவர்கள் பணியால் வளர்ச்சி யடைந்து, பின்னர் தஞ்சை நாயக்க மன்னர்களால் வளர்க்கப்பட்டு அதன் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால் வளர்ச்சியுற்று, இன்று பன்மொழிச் சுவடிகளும், காகிதத்தில் எழுதிய நூல்களும், ஓவியங்களும் கொண்ட ஓர் ஒப்பரிய நூலகமாகத் திகழ்கின்றது.

08.11.2020

க்யூவில் நிற்கும் பழக்கம் எந்த நாட்டில் முதன் முறையாக நடைமுறைக்கு வந்தது? இங்கிலாந்து

07.11.2020

நெருப்பு மழை பொழியும் காடுகள் எங்கு உள்ளது? மலேசியா

06.11.2020

மகாத்மா காந்தி கடைசியாக தமிழகத்திற்கு எந்த ஆண்டு வந்தார்? 1946

05.11.2020

ஆடிக் காற்று மணிக்கு எத்தனை கி. மீ. வேகத்தில் வீசும்? 39 கி. மீ

04.11.2020

சொர்ண சீரகம் என்று அழைக்கப்படுவது எது? கரும்பு

03.11.2020

ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்த சமயத்தில் அவரது வயது என்ன? 38

02.11.2020

பாம்புகளை முதலில் வழிபட்டவர்கள் யார்? கிரேக்கர்கள்

01.11.2020

பெயருக்கு முன்னாள் இனிஷியல் போடும் வழக்கத்தை கண்டு பிடித்தவர்கள் யார்? ஆங்கிலேயர்கள்