அம்புலிமாமா' சிறுவர் பத்திரிகை, தமிழில் முதன் முதலில் எந்த ஆண்டு வெளிவந்தது? 1947 விளக்கம்:: அம்புலிமாமா பரவலாக வாசிக்கப்படும் சிறுவர் இதழ் ஆகும். இது ஜூலை 1947 ஆம் ஆண்டு பி.நாகிரெட்டி, சக்ரபாணி ஆகியோரால் தொடங்கப்பட்டு தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றது. இந்திய தொன்மவியல் கதைகளை முதன்மையாக வைத்துப் பலநிறப் படங்களோடு சொல்வது அம்புலிமாமாவின் சிறப்பு. இது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உட்பட 14 மொழிகளில் வெளிவருகின்றது. கண்பார்வையற்றவர்களுக்கான அம்புலிமாமா பதிப்பு 1998 வரை வந்தது. அம்புலிமாமா ஜூலை 1947 ஆம் ஆண்டு பி. நாகிரெட்டி, சக்ரபாணி ஆகியோரால் தெலுங்கில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தமிழ்ப் பதிப்பு ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு வெளிவந்தது. சிறுவர்களுக்கு நல் ஒழுக்கத்தையும் பண்புகளையும் ஊட்டுவதே அம்புலிமாமாவின் குறிக்கோள்.