Posts

Showing posts from April, 2022

30.04.2022

இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று கூறி அதனை அங்கீகரித்த பிரிட்டிஷ் பிரதமர் யார்? கிளமென்ட் ஆட்லி

29.04.2022

ராஜாராம் மோகன் ராய் சமாதி எங்கு உள்ளது? லண்டன்

28.4.2022

தலைக்கு விக் அணியும் நாகரிகத்தை உலகம் முழுவதும் பரப்பியவர் யார்? 13 ஆம் லூயி

27.04.2022

பொதுவாக பழங்கால கல்வெட்டுகள் எந்தப் பெயரால் அழைக்கப்படுகின்றன? சாசனங்கள்

26.04.2022

கொல்கத்தா மீது இரண்டாம் உலக யுத்தத்தின் சமயத்தில் ஜப்பான் எந்த ஆண்டு குண்டு வீசியது? 1943

25.04.2022

ஆரிய சமாஜத்தை துவக்கியவர் யார்? சுவாமி தயானந்த சரஸ்வதி

24.04.2022

இந்தியா சுதந்திரம் அடைந்த சமயத்தில் அது எத்தனை சமஸ்தானங்களாக இருந்தது? 522

23.04.2022

விடுதலை இந்தியாவில் பொதுத் தேர்தல் எப்போது நடந்தது? 1952

22.04.2022

பெர்லின் சுவர் எந்த ஆண்டு கட்டப்பட்டது? 1961

21.04.2022

பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி எந்த நாட்டின் சர்வாதிகாரியாக விளங்கினான்? இத்தாலி விளக்கம்:: பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (ஜுலை 29, 1883 - ஏப்ரல் 28, 1945) என்ற முழுப்பெயர் கொண்ட முசோலினி இத்தாலி நாட்டுக்கு 1922 - 1943 காலப்பகுதியில் தலைமை வகித்தவர். இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சியை முசோலினி நடத்தினார்.

20.04.2022

பின்லாந்து எப்போது சுதந்திரம் அடைந்தது? 1917

19.04.2022

சுயஸ் கால்வாய் எந்த ஆண்டு திறக்கப்பட்டது? 1869

18.04.2022

1870 இல் ஜெர்மனி எந்த நாட்டின் மீது போர் தொடுத்தது? பிரான்ஸ்

17.04.2022

நெப்போலியன் தன்னைத் தானே எந்த வருடத்தில் பிரான்சின் பேரரசராக அறிவித்துக் கொண்டார்? 1801

16.04.2022

வெள்ளை மாளிகை எங்கு அமைந்து உள்ளது? வாஷிங்டன் டி. சி

15.04.2022

லெனினுக்கு பிறகு ரஷ்யாவை வழி நடத்தியவர் யார்? ஸ்டாலின் விளக்கம்:: லெனினுக்கு பிறகு ரஷ்யாவை வழி நடத்தியவர் ஸ்டாலின் ஆவார். இவர் தான் ரஷ்யாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.

14.04.2022

சீக்கியர்களின் கடைசி குரு யார்? குரு கோவிந்த் சிங்

13.04.2022

இந்திய தேசிய இயக்கத்தின் தீவிரவாதத் தலைவராக கருதப்பட்டவர் யார்? பாலகங்காதர திலகர்

12.04.2022

வானவன் செம்பியன் என்று அழைக்கப்பட்ட பாண்டிய மன்னன் யார்? கோச்சடையன் ரணதீரன் விளக்கம்:: ரணதீரன் கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். அரிகேசரியின் மகனான இவன் தனது தந்தை கி. பி. 670 ஆம் ஆண்டளவில் இறந்தபின்னர் அரியணை ஏறினான். கடல் போன்ற சேனையினை உடையவன் எனப்படுகிறான்.  ரணதீரன் சேரர், சோழர், கொங்கர், கர்நாடர், ஆய்மன்னர் போன்றோரைப் போரில் வென்றான். இவனே வானவன் செம்பியன் என்று அழைக்கபடுகிறான்.

11.04.2022

15 ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் இந்தியாவிற்கு மட்டும் அல்ல இன்னொரு நாட்டிற்கும் அன்று தான் சுதந்திர தினம். அது எந்த நாடு? தென் கொரியா

10.04.2022

ரோமாபுரியின் கடைசி சக்கரவர்த்தி யார்? ரோமுலஸ் அகஸ்டஸ்

09.04.2022

சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவுக்கு எந்த நாடு பரிசளித்தது? பிரான்ஸ்

08.04.2022

தொல் பொருள் இலாக்காவை முதன் முதலில் இந்தியாவில் ஏற்படுத்தியவர் யார்? கர்சன்

07.04.2022

சுவாமி விவேகானந்தர் சிகாகோ செல்ல உதவியவர் யார்? பாஸ்கர சேதுபதி

06.04.2022

மருது பாண்டியர்கள் எந்த இடத்தில் தூக்கில் இடப்பட்டார்கள்? திருப்பத்தூர் கோட்டை

05.04.2022

இந்தியா மீது சீனப் படையெடுப்பு எந்த ஆண்டில் நடந்தது? 1962

04.04.2022

ராபர்ட் கிளைவ் கிழக்கிந்திய கம்பெனியின் ஒரு சாதாரண எழுத்தராக எப்போது இந்தியா வந்தார்? 1743

03.04.2022

இந்தியாவில் ஆங்கிலேயே அரசை நிலை நாட்டியவர் யார்? இராபர்ட் கிளைவ்

02.04.2022

காந்திஜி காங்கிரசின் தலைமைப் பொறுப்பை எந்த ஆண்டு ஏற்றார்? 1920

01.04.2022

பாகிஸ்தான் பிரிவினையை வலியுறுத்தியவர் யார்? முகம்மது அலி ஜின்னா