Posts

Showing posts from December, 2020

01.01.2021

இந்தியக் கடற்படையின் தலைமைப் பதவி எது? அட்மிரல்

31.12.2020

எண் வழிப் பாதை என்னும் ஒழுக்க நெறிகளை வழங்கியவர் யார்? புத்தர் விளக்கம்:: நற்காட்சி - Right View, நல்லெண்ணம் - Right Thought, நன்மொழி - Right Speech, நற்செய்கை - Right Conduct, நல்வாழ்க்கை - Right Livelihood, நன்முயற்சி - Right Effort, நற்கடைப்பிடி - Right Mindfulness, நற்தியானம் - Right Meditation ஆகிய இவையே எண் வழிப் பாதை ஆகும். இது புத்த பிரானால் சொல்லப்பட்டவை.

30.12.2020

கொரியர் சேவை முதன் முதலில் எந்த நாட்டில் துவங்கியது? இங்கிலாந்து

29.12.2020

தேசியப் பாதுகாப்புக் கல்லூரி எந்த இடத்தில் அமைந்து உள்ளது? புது டில்லி

28.12.2020

சென்னையில் எந்த ஆண்டு தொலைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டது? 1882 ஆம் ஆண்டு

27.12.2020

ஒற்றைத் தண்டவாளத்தில் செல்லும் ரயிலுக்கு என்ன பெயர்? மோனோ ரயில்

26.12.2020

தேசியப் பால் பண்ணை ஆராய்ச்சிக் கழகம் எங்கு அமைந்து உள்ளது? கர்நூல்

25.12.2020

டெல்லியில் உள்ள ராஜ்காட் சமாதி யாருடைய நினைவாகக் கட்டப்பட்டது? மகாத்மா காந்தி

24.12.2020

இந்தியாவில் வனவிலங்குத் துறையின் பாது காப்பாளர் யார்? இந்தியப் பிரதமர்

23.12.2020

ராஜ்ய சபாவின் தலைவர் யார்? துணை ஜனாதிபதி

22.12.2020

இந்தியாவில் கழுதைப் பந்தயம் எந்த மாநிலத்தில் நடக்கிறது? இராஜஸ்தான்

21.12.2020

இந்தியாவின் முதல் நாளிதழ் எது? பெங்கால் கெசட்

20.12.2020

விண்வெளிக்கு சென்ற முதல் விலங்கினம் எது? நாய் விளக்கம்:: விண்வெளி என்பது ஒப்பீட்டளவில், கோள்களின் காற்று மண்டலத்துக்கு வெளியேயுள்ள, பிரபஞ்சத்தின் வெறுமையான, பகுதியாகும். இது பூமியின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டருக்கு மேலே ஆரம்பமாவதாகக் கொள்ளலாம். விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கினம் நாய் தான்.

19.12.2020

மகாநதி எந்த மாநிலத்தில் பாய்கிறது? ஒரிசா

18.12.2020

ஆரம்பப் பள்ளிகள் அதிகம் உள்ள நாடு எது? சீனா

17.12.2020

மனித சக்தியை பயன்படுத்தி நீண்ட நேரம் நடக்கும் ஒரே விளையாட்டின் பெயர் என்ன? சைக்கிள் போட்டி விளக்கம்:: டூர் டி பிரான்ஸ் என்ற 21 நாள் சைக்கிள் போட்டி. 3569 மைல் தூரம் வரை பெடல் செய்து சைக்கிளை ஓட்ட வேண்டும்.

16.12.2020

திராட்சைப் பழத்தில் உள்ள அமிலம் எது? டார்டாரிக் அமிலம்

15.12.2020

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார்? மௌலானா அபுல்கலாம் ஆசாத்

14.12.2020

இந்தியாவின் ஈடன் தோட்டம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது? சிக்கிம் விளக்கம்:: சிக்கிம் இமய மலைத்தொடரில் அமைந்த இந்திய மாநிலமாகும். இது இந்தியாவின் வடகிழக்கு மாநிலம். தனி நாடாக விளங்கிய சிக்கிம், 1975ஆம் ஆண்டு இந்தியாவுடன் சேர்க்கப் பட்டது. சிக்கிமின் தலைநகர் கேங்டாக் ஆகும்.  நேபாள மொழி அதிகாரப்பூர்வ மொழி. இந்து மதமும், வஜ்ராயன புத்த மதமும் இம்மாநில மக்களால் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

13.12.2020

பெருங்கடல்களை ஆள்பவர் என்று கூறப்படுபவர் யார்? செங்கிஸ்கான் விளக்கம்:: செங்கிஸ் கான் (1162 அல்லது 1155 – ஆகஸ்டு 18, 1227) மங்கோலியப் பேரரசைத் தாபித்த மங்கோலிய அரசராவார். 1206 இல் மங்கோலிய துர்கிய இனக்குழுக்களை இணைத்து மங்கோலியப் பேரரசை இவர் அமைத்தார். 1187 - ஆம் ஆண்டு செங்கிஸ்கான் என்ற பட்டப்பெயர் பெற்றார். இதற்கு 'அண்டத்தின் சக்கரவர்த்தி' என்பது பொருள்.

12.12.2020

'சோவியத் குடியரசு' ஒன்றியத்தை உருவாக்கியவர் யார்? லெனின் விளக்கம்:: விளாதிமிர் இலீச் லெனின் Vladimir Ilyich Lenin ஒரு உருசியப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும், மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார்.

11.12.2020

முதன்முதலில் ஆஸ்திரேலியாவை கண்டறிந்த ஆங்கிலேயர் யார்? வில்லியம் டாம்பியர்

10.12.2020

'விடிவெள்ளி' என்பது எந்தக் கிரகத்தைக் குறிக்கிறது? வீனஸ்

09.12.2020

பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் யார்? முகமது அலி ஜின்னா

08.12.2020

சுதேசமித்திரன் இதழைத் தொடங்கியவர் யார்? ஜி. சுப்ரமணிய அய்யர்

07.12.2020

ஒரு கிலோமீட்டர் தூரத்தை கடக்க நத்தை எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு? 24 மணி நேரம்

06.12.2020

லாவா எரிமலைத் தீக்குழம்பின் வெப்பநிலை எவ்வளவு? 400 டிகிரி பாரன்ஹீட் விளக்கம்:: எரிமலையில் இருந்து வெளிப்படும் தீக்குழம்பிற்கு தான் (லாவா) என்று பெயர். இதன் வெப்பநிலை 400 டிகிரி பாரன்ஹீட் ஆகும்.

05.12.2020

மின்னலின் அதிகபட்ச வெப்பம் எவ்வளவு டிகிரி சென்டிகிரேடு  இருக்கும்? 12,000 டிகிரி சென்டிகிரேடு விளக்கம்:: சாதாரணமாக தோன்றும் மின்னலின் நீளம் சுமார் மூன்றரை மைல்கள் சில மின்னல்கள் 5 மைல்கள் தூரம் வரையும் இருக்கும். இதன் அதிகபட்ச வெப்பம் 12 ஆயிரம் டிகிரி சென்டிகிரேடு இருக்கும்.

04.12.2020

இலங்கையின் தேசிய விளையாட்டு எது? கைப்பந்து

03.12.2020

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிக உயர்ந்த சிகரம் எது? ஆனைமுடி சிகரம்

02.12.2020

பரப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய நாடு எது? ரஷ்யா