Posts

Showing posts from August, 2020

04.09.2020

சீதை பிறந்த ஜனகபுரி தற்போது எங்கு உள்ளது? பாகிஸ்தான் விளக்கம்:: சீதை பிறந்த உண்மையான ஜனகபுரி பிரிவினைக்குப் பிறகு தற்போது பாகிஸ்தான் பகுதியில் உள்ளது.

03.09.2020

சீனப் பெருஞ்சுவரின் நீளம் எவ்வளவு? 21,196 கி.மீட்டர் விளக்கம்:: நிலவில் இருந்து பார்த்தால் தெரியும் ஒரே மனித படைப்பு என்ற பெருமை இந்தச் சீனப் பெருஞ்சுவருக்கு மட்டுமே உண்டு. சீனாவின் முதல் பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் ஐடியா. அவரது ஆட்சிக் காலத்தில் தான் இந்தச் சுவர் (கி. 220-206) கட்டப்பட்டது.

02.09.2020

மேட்டூர் அணை எந்த ஆண்டு கட்டப்பட்டது? 1932 விளக்கம்:: மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அணையைக்கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

01.09.2020

நேபாளம் என்பதன் பொருள் என்ன? புனித குகை விளக்கம்:: நேபாளம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடாகும். தெற்காசியாவில் உள்ள இந்நாட்டின் வடக்கில் மக்கள் சீன குடியரசும் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளில் இந்தியாவும் அமைந்துள்ளன. நேபாளம் பொதுவாக இமாலய இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. கௌதம புத்தர் பிறந்த லும்பினி நகரம் நேபாள-இந்தியா எல்லையில் உள்ளது.

31.08.2020

இந்தியாவில் மிகப் பழமையான மியூசியம் எங்கு உள்ளது? கொல்கத்தா விளக்கம்:: இந்தியாவில் மிகப் பழமையான மியூசியம் கொல்கத்தாவில் உள்ளது. இது 1814 இல் நிறுவப்பட்டது.

30.08.2020

நோபல் பரிசு எந்தத் துறைக்கு கொடுக்கப் படுவதில்லை? கணிதம் விளக்கம்:: நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அப்படிப் பட்ட நோபல் பரிசு கணிதத்திற்கு மட்டும் கொடுக்கப் படுவதில்லை.

29.08.2020

உலகிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கம் எங்கு உள்ளது? சவூதி விளக்கம்:: உலகிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கம் சவூதியில் உள்ள ஜெடா ஆகும். 

28.08.2020

கார்டூன்களை தமிழ் இதழில் முதலில் வெளியிட்டவர் யார்? பாரதியார் விளக்கம்:: பாரதியார் தான் முதன் முதலில் கார்டூன் படங்களை தமிழ் இதழ்களில் கொண்டு வந்தார். அதன் பிறகே மற்ற இதழ்களும் இன்று வரையில் அதனைப் பின்பற்றுகிறது.

27.08.2020

நிமோனியா என்னும் நோய் எந்த உறுப்பை அதிகமாகத் தாக்குகிறது? நுரையீரல் விளக்கம்:: நுரையீரல்களின் காற்று பைகளில் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவது நிமோனியா. இந்த கிருமிகள் பேக்டீரியா அல்லது வைரஸ் வகைகளைச் சேர்ந்தவையாக இருக்கலாம். சில வேளைகளில் இவை காளான்களாகவும் இருக்கலாம்.

26.08.2020

இந்தியாவில் முதன் முதலில் சொந்தமாக ஒரு விமானத்தை இயக்கியவர் யார்? மறைந்த ஜே. ஆர்.டி. டாடா விளக்கம்:: மறைந்த ஜே. ஆர்.டி. டாடா தான் இந்தியாவில் முதன் முதலில் சொந்தமாக ஒரு விமானத்தை 1932 ஆம் ஆண்டு முதல் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

25.08.2020

மூன்று நிமிடங்கள் மட்டும் மலர்ந்து இருக்கும் மலர் எது? பார்லி மலர் விளக்கம்:: மூன்று நிமிடங்கள் மட்டும் மலர்ந்து இருக்கும் மலர் பார்லி மலர் ஆகும். இது மிகவும் அரிதான மலர் ஆகும்.

24.08.2020

இந்தியாவில் முதல் வானொலி நிலையம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? 1927

23.08.2020

உலகிலேயே எந்த நாட்டின் தேசியக் கொடி மிகவும் பெரியது? டென்மார்க் விளக்கம்:: உலகிலேயே டென் மார்க் நாட்டின் கொடி தான் மிகவும் பெரியது 28:34 முதல் 28 :37 வரை அதன் நீள அகலம் இருக்கும்.

22.08.2020

'நீலப் புத்தகம்' எந்த நாட்டின் அரசாங்க புத்தகம்? இங்கிலாந்து விளக்கம்:: இங்கிலாந்து நாட்டின் அரசாங்க புத்தகம் நீலப் புத்தகம் எனப்படும். இது இங்கிலாந்து அரசால் பதிவுப் பேணலுக்காக பயன்படுத்தப்படுகிறது.

21.08.2020

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1964 விளக்கம்:: இந்தியாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்று தான் இந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன். நாடு முழுவதும் தனது கிளையை பரப்பி உள்ளது இது. இது 1964 இல் துவங்கப்பட்டது.

20.08.2020

நடமாடும் சினிமா தேட்டர்கள் உள்ள நாடு எது? வடகொரியா விளக்கம்:: உலகத்திலேயே வடகொரியாவில் தான் நடமாடும் சினிமா தியேட்டர்கள் அதிகம் உள்ளது.

19.08.2020

பனாமா கால்வாய் மக்கள் உபயோகத்திற்காக திறக்கப்பட்ட ஆண்டு எது? 15.8.1948

18.08.2020

'தங்க இலை' எனப்படுவது எது? சணல் விளக்கம்:: சணல் நீண்ட, மென்மையான, மினுக்கமான தாவர இழையாகும். அதை நூற்று கரடுமுரடான வலிமையான கயிறாகத் திரிக்கலாம். அது பாரம்பரிய கோர்கோருஸ் டிலாசியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும்.சணல் இயற்கையான இழைகளில் மிக விலைகுறைவானதொன்றாகும்.  மேலும் பருத்திக்கு இரண்டவதாக அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதும், பல்வேறு பயன்பாடுகளுக்கு இருப்பதுமாகும். சணல் இழைகள் முதன்மையாக செல்லுலோசு தாவர பொருட்களிலும் (தாவர இழையின் பெரும் பங்கு) லிக்னினிலும் (பெரும் மர இழைப் பொருட்கள்) அடங்கியுள்ளதாகும். ஆகையால் அது ஒரு லிக்னோ-செல்லுலொசிக் இழைப் பகுதியாக ஒரு பகுதியில் சவுளி இழையாகவும் மற்றொரு பகுதியில் மரமாகவுமுள்ளது.

17.08.2020

பசுமையான காடுகளை எப்படி அழைப்பர்? பச்சைத் தங்கம் விளக்கம்:: பசுமையான காடுகளை பச்சைத் தங்கம் என்றும் அழைப்பதுண்டு. அதுபோல வெற்றிலையை பசும் தங்கம் என்று அழைப்பார்கள்.

16.08.2020

யுனானி வைத்தியம் பிறந்த நாடு எது? கிரேக்கம் விளக்கம்:: யூனானி என்ற சொல் அரபு, இந்தி, பாரசீகம் மற்றும் உருது மொழிகளில் கிரேக்கத்தைச் சேர்ந்தது எனப் பொருள் படும். யூனானி மருத்துவம் (யுனானி மருத்துவம்) என்பது கிரேக்க-அராபிய வைத்திய முறையாகும்.

15.08.2020

'சினேக் ரிவர்' எங்கு உள்ளது? அமெரிக்கா விளக்கம்:: 'சினேக் ரிவர்' அமெரிக்காவில் உள்ளது. இது பாம்பு போல வளைந்து வளைந்து காணப்படுவதால் இதற்கு இந்தப் பெயர் வந்தது. 1735 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த ஆறு அமெரிக்காவின் முக்கிய ஆறுகளுள் ஒன்று.

14.08.2020

எறும்பு தனது எடையைப் போல எத்தனை மடங்கு எடையை முதுகின் மேல் தூக்கிச் செல்லும்? 50 மடங்கு விளக்கம்:: எறும்பு குழுவாக வாழும் ஆறுகால்கள் கொண்ட ஒரு பூச்சியினமாகும். இவை வியப்பூட்டும் வகையில் குழு அல்லது குமுக ஒழுக்கம் (சமூக ஒழுக்கம்) கொண்ட வாழ்வைக் கொண்டுள்ளன. உலகில் 22,000 வகை எறும்புகள் இருப்பதாகத் தெரிகிறது. சராசரியாக ஒரு எறும்பு தனது எடையைப் போல 50 மடங்கு எடையை முதுகின் மேல் தூக்கிச் செல்லக் கூடியது. 

13.08.2020

'அழும் சுவர்' எங்கே இருக்கிறது? ஜெருசலேம் நகரில் விளக்கம்:: 'அழும் சுவர்' என்பது யூத மக்களால் மிகவும் புனிதமாக கருதப்படும் சுவர் ஆகும். இது ஜெருசலேம் நகரில் உள்ளது.

12.08.2020

அன்னை தெரசாவின் தாயகம் எது? யுகோஸ்லாவியா விளக்கம்:: யுகோஸ்லாவியா முதல் உலகப் போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்டது, அது அப்போது பொதுவாக "வெர்செல்லிஸ் மாகாணம்" என அழைக்கப்பட்டது. இது தான் அன்னை தெரசாவின் தாயகம்.

11.08.2020

முதல் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட நாடுகள் எத்தனை? 9 நாடுகள் விளக்கம்:: முதல் ஒலிம்பிக் போட்டி 1896 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் 9 நாடுகள் கலந்து கொண்டன.

10.08.2020

இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட வருடம் எது? 1948 மே 11 விளக்கம்:: இஸ்ரேல் ஒரு யூத நாடு. இந்த இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட வருடம் 1948 மே 11 ஆகும். இன்று இது இந்தியாவின் நட்பு நாடாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

09.08.2020

உலக நாடுகளுள் முதன் முதலாக எந்த நாட்டில் இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது? ஜெர்மனி விளக்கம்:: உலக நாடுகளுள் முதன் முதலில் ஜெர்மனியில் தான் இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதுவும் சுதந்திரத்திற்கு முன்னமே, ஆம் 1907 ஆம் ஆண்டு ஜெர்மனியின்  ஸ்டட்கார்ட் என்னுமிடத்தில் ஏற்றப்பட்டது.

08.08.2020

உலோக நாணயத்தை முதன் முதலில் வெளியிட்ட நாடு எது? அமெரிக்கா விளக்கம்:: அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்பது United States of America, USA, US, பொதுவாக யுனைடெட் ஸ்டேட்ஸ் , யு.எஸ். , யு.ஏ, அல்லது அமெரிக்கா என அழைக்கப்படுகிறது. இது ஐம்பது மாநிலங்களும் ஓர் ஐக்கிய மாவட்டமும் கொண்ட ஐக்கிய அரசியல் சட்ட குடியரசு நாடாகும். இதுவே முதன் முதலில் உலோக நாணயத்தை அறிமுகப் படுத்தியது.

07.08.2020

பழமையான ரோமன் காலெண்டர் எத்தனை மாதங்களைக் கொண்டு இருந்தது? 10 மாதங்கள் விளக்கம்:: ரோமாபுரியை நிறுவிய ரோமுலஸ்தான் நாள்காட்டிகளின் தந்தை என்று சொல்கிறார்கள். கி.மு. 753 -இல் அவர் வகுத்த காலண்டரில் 10 மாதங்கள் இருந்தது.

06.08.2020

'விஞ்ஞான சோசலிசத்தின் தந்தை' என்று அழைக்கப்படுபவர் யார்? காரல் மார்க்ஸ் விளக்கம்:: கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். 'விஞ்ஞான சோசலிசத்தின் தந்தை' என அழைக்கப்படுபவர் இவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார்.

05.08.2020

இந்திய தேசிய கீதம் பாடி முடிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் எவ்வளவு? 52 வினாடிகள் விளக்கம்:: சன கண மன... இந்திய நாட்டுப்பண் ஆகும்.  இப்பாடல் வங்காள மொழியில் இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 விநாடிகள் ஆகும்.

04.08.2020

ஒரு நாழிகை என்பது எத்தனை நிமிடங்கள்? 24 நிமிடங்கள் விளக்கம்:: நாழிகை என்பது பண்டைய கால நேர அளவாகும். தமிழர் இந்தக் கால அளவை முறையைப் பயன்படுத்தினர்.1 நாழிகை = 24 நிமிடங்கள் = 60 விநாழிகை = 3600 லிப்தம் = 216000 விலிப்தம் = 12960000 பரா = 777600000 தத்பரா என்ற கணக்கில் இது வரும்.

03.08.2020

இந்திய அரசு எந்த ஆண்டில் மயிலை நம் தேசியப் பறவையாக அறிவித்தது? 1964 விளக்கம்:: இந்தியாவின் தேசியப் பறவை மயிலாகும். இதன் அறிவியல் பெயர் பவோ கிரிஸ்டேடஸ் (Pavo cristatus). இவை இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாக காணப்படுகின்றன.

02.08.2020

'நான் ஒரு தமிழ் மாணவன்' என்று கூறியவர் யார்? கால்டு வெல் பாதிரியார் விளக்கம்:: டாக்டர் கால்டுவெல் பாதிரியார், தன் மதத்தை பரப்ப இங்கு வந்த போதும் தமிழ் கற்று பல நூல்களை தமிழில் எழுதி உள்ளார். ஆனால் அவர் எழுதிய நூல்களில் பல சர்ச்சையை ஏற்படுத்தியதாக வரலாறு கூறிகிறது. இவர் தான் தன்னை ஒரு தமிழ் மாணவனாக கூறிக் கொள்கிறார். 

Full Form

Image