Posts

Showing posts from January, 2022

31.01.2022

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி எப்போது நிறுவப்பெற்றது? 1600 விளக்கம்:: தற்போது இந்தியாவைக் கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் ஆண்டு வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியை சஞ்சீவ் மேத்தா என்ற இந்தியத் தொழிலதிபர் 15 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் விலைக்கு வாங்கியுள்ளார்.

30.01.2022

டச்சுக் காரர்கள் என்போர் எந்த நாட்டினர்? ஹாலந்து விளக்கம்:: ஒல்லாந்து (Holland, ஹாலந்து) என்பது நெதர்லாந்தின் மேற்கத்திய பகுதியில் உள்ள பிரதேசத்திற்கு வழங்கப்படும் பொதுவான பெயராகும். 17 ஆம் நூற்றாண்டில் ஹாலந்து வலிமையான கடற்படையையும் பொருளாதார வலிமையையும் பெற்றிருந்தது என்பதுடன் டச்சு குடியரசின் மற்ற பிரதேசங்களிலும் ஆட்சி செலுத்தி வந்தது.

29.01.2022

மராட்டிய மன்னர் சிவாஜியின் குருவாகக் கருதப்படுபவர் யார்? தாதாஜி கொண்டதேவ் விளக்கம்:: தாதாஜி கொண்டதேவ் தான் சிவாஜிக்கு போர் வித்தைகளை கற்றுக் கொடுத்த குரு. பிற்காலத்தில் சிவாஜி குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது..

28.01.2022

வணிகத்திற்காக இந்தியாவுக்கு வந்த முதல் ஐரோப்பியர்கள்? போர்சுகீசியர்கள் விளக்கம்:: போர்த்துகல் (போர்த்துக்கீசம்: Portugal), என்றழைக்கப்படும் போர்த்துகல் குடியரசு ஐரோப்பாக் கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் ஐபீரியத் தீவக்குறையில் உள்ள ஒரு நாடு ஆகும். ஐரோப்பாவின் மேற்குக் கோடியில் அமைந்த நாடும் இதுவே. இதன் வடக்கிலும் கிழக்கிலும் ஸ்பெயின் நாடும் மேற்கிலும் தெற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன.

27.01.2022

ராஜ ராஜ சோழனின் இயற்பெயர் என்ன? அருள் மொழி வர்மன் விளக்கம்:: முதலாம் இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். .

26.01.2022

பாபரின் சுயசரிதையான பாபர் நாமா எந்த மொழியில் எழுதப் பெற்றது? துருக்கி மொழி விளக்கம்:: பாபர் நாமா (Baburnama) என்பது முகலாய மன்னர் பாபரின் வாழ்க்கைக் குறிப்புப் புத்தகம் ஆகும். இது சகாடை மொழியில் எழுதப்பட்டது. இந்நூலுக்கு "பாபரின் புத்தகம்" அல்லது "பாபரின் கடிதங்கள்" என்றும் பொருளுண்டு. இந்நூல் பாபரின் நினைவிலிருந்து எழுதப்பட்டது.  பாபரின் காலம் பொதுவருடம் 1483 லிருந்து 1530 வரை. இந்நூலுக்கு பாபர் அதிக கவனமும் சிரத்தையும் எடுத்துக் கொண்டார். வார்த்தை மற்றும் வாக்கிய அமைப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தினார்.  பாரசீக மொழியில் ஆங்காங்கே சில கவிதைகளும் இப்புதகத்தில் இடம் பெறுகின்றன. பாபரின் பேரன் அக்பர் காலகட்டத்தில் இப்புத்தகம் அதன் மூல மொழியிலிருந்து பாரசீக மொழியில் முழுவதும் மொழிபெயர்க்கப்பட்டது.

25.01.2022

ஹைதராபாத் நகரம் எப்போது உருவாக்கப்பட்டது? 1549 விளக்கம்:: ஐதராபாத் தென்னிந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இந்நகரம் "முத்துக்களின் நகரம்" என்றும் நிஜாம்களின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது..

24.01.2022

லோடி வம்சத்தின் கடைசி அரசர் யார்? இப்ராகிம் லோடி விளக்கம்:: இப்ராகிம் லோடி (இறப்பு: ஏப்ரல் 21, 1526) என்பவர் தில்லி சுல்தானகத்தின் கடைசி ஆட்சியாளர் ஆவார். இவர் ஒரு ஆப்கானியர். குறிப்பாக, பஸ்தூன் இனத்தின் கில்சாய் பழங்குடியைச் சேர்ந்தவர். 1517 தொடக்கம் 1526 வரை இந்தியாவின் பெரும் பகுதியை இவர் ஆண்டார்.  பின்னர் இந்தியாவை மூன்று நூற்றாண்டுகள் வரை ஆண்ட முகலாயர் இவரை 1526 ஆம் ஆண்டில் தோற்கடித்து இந்தியாவைக் கைப்பற்றினர்..

23.01.2022

டெல்லியை ஆண்ட முதல் பெண் சுல்தான் யார்? சுல்தானா ரசியா விளக்கம்:: டில்லியை ஆண்ட இல்துமிஷின் மகள் ரசியா பேகம். கி.பி.1236 ஆம் ஆண்டு இல்துமிஷ் மரணமடைந்தார்.  வீரமும், விவேகமும் அரசுருக்கு உண்டான அனைத்து அம்சங்களும் பொருந்திய ரசியா பேகம் அரியணை ஏறினார். எனினும் "ஒரு பெண் தங்களை ஆள்வதா?" என்று நினைத்த பழமை வாதி பிரபுக்கள் ரசியா பேகத்தை கொன்றனர். பெண்ணாகப் பிறந்ததால் திறமை இருந்தும் புறக்கணிக்கப் பட்ட ரசியா பேகத்தின் வரலாறு உண்மையில் ஒரு சோகக் கதை தான். .

22.01.2022

இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லிம் மன்னர் யார்? முகம்மது பின் காசிம் விளக்கம்:: இந்தியாவுக்கு எதிரான முதல் முஸ்லிம் படையெடுப்பு கி.பி.711-இல் முகமது பின் காசிம் தலைமையில் நடைபெற்றது, அப்போது அரேபியர்கள் சிந்து மாநிலத்தை வென்று தம் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தனர். பாக்தாத்தில் ஆட்சிபுரிந்த கலீபாவின் ஆணைப்படி நிகழ்ந்த இப்படையெடுப்பு, நிலையான ஆட்சிக்கு வழிகோலவில்லை, தொலைதுரத்திலிருந்து நேரடியாக ஆளுவதில் உள்ள சிரமங்களால் இவ்வாட்சி கி. பி.ஒன்பதாம் நுற்றாண்டின் மத்தியில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்குப் பின்னர் கி. பி.1001-இல் இருந்து தொடர்ச்சியாக, பல கடும் படையெடுப்புகளை கஜினி முகமது நடத்தினார். இவர் 1030-ஆம் ஆண்டு இறந்தார்.  ஆனால் முப்பதாண்டு காலக் குறுகிய இடைவெளியில் 17 முறை படையெடுத்தார். இவரையடுத்து 1173-ஆம் ஆண்டு முதல் கோரி முகமதுவின் படையெடுப்புகள் தொடங்கின, இவர் கி.1206-இல் கொல்லப்பட்டார், கஜினி முகமதுவின் 30 ஆண்டுகாலப் படையெடுப்புகளும் இந்தியாவைக் கடுமையாக பாதித்தன.

21.01.2022

மாமல்லபுரத்தை நிர்மாணித்தவர் யார்? முதலாம் நரசிம்மவர்ம பல்லவர் விளக்கம்:: மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவைதவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உள்ளும் காணப்படுகின்றன. மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்த பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது.

20.01.2022

சோழர்களின் தலை நகரம் எது? உறையூர் விளக்கம்:: இந்த உறையூர் தற்போது தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி(திருச்சி) மாநகரின் ஒரு பகுதியாகும். காவேரியாற்றின் தென்கரையில், திருச்சிராப்பள்ளி கோட்டை இரயில் நிலையச் சந்திப்புக்கு மேற்கில் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி முக்கிய இரயில் நிலையச் சந்திப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது.

19.01.2022

பழங்கால ஆந்திராவை ஆண்ட அரசர்கள் யார்? சாதவாகனர்கள்

18.01.2022

ஹர்ஷரின் அவைக்கு வந்த வெளிநாட்டுப் பயணி யார்? யுவான் சுவாங் விளக்கம்:: சுவான்சாங் (யுவான் சுவாங்) என்பவர் ஒரு புகழ் பெற்ற சீன மதகுருவும், கல்வியாளரும், பயணியும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இவரது பயணங்கள், சீனாவின் தொடக்க தாங் காலத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தின. தனது 17 ஆண்டுகள் பிடித்த இந்தியாவுக்குச் சென்று சீனா திரும்பிய பயணத்தின் மூலம் இவர் பெரும் புகழ் எய்தினார். தனது பயணம் பற்றிய விபரங்களை அவர் தனது தன்வரலாற்றில் குறித்துள்ளார்.  இவர் எழுதிய பயண நூலின் பெயர் சியூக்கி..

17.01.2022

குப்தப் பேரரசின் முதல் அரசர் யார்? ஸ்ரீ குப்தர்

16.01.2022

இரண்டாம் அசோகர் என்று இந்திய வரலாற்றில் அழைக்கப்படுபவர் யார்? கனிஷ்கர்

15.01.2022

மௌரிய வம்சத்தை துவக்கியவர் யார்? சந்திரகுப்த மவுரியர்

14.01.2022

அலெக்சாண்டரை எதிர்த்துப் போரிட்ட இந்திய மன்னர் யார்? போரஸ்

13.01.2022

மொஹஞ்சதாரோ என்ற வார்த்தையின் பொருள் என்ன? இறந்தவர் மேடு

12.01.2022

மிகப் பழமையான வேதம் எது? ரிக் வேதம்

11.01.2022

'அரசியின் மணிமுடி' என்று எதனை அழைக்கிறார்கள்? தாஜ்மகால்

10.01.2022

விஜயநகரப் பேரரசின் தலைநகராக விளங்கியது எது? ஹம்பி

09.01.2022

உலகப் புகழ் பெற்ற மோனோலிசா ஓவியத்தை முதன் முதலில் வாங்கியவர் யார்? நெப்போலியன் போனபார்ட்

08.01.2022

இந்தியாவின் பாராளுமன்றம் முதன் முதலில் எவ்வாறு அழைக்கப்பட்டது? ஹவுஸ் ஆ ஃ ப் தி பீப்பிள்

07.01.2022

'வாட்டர்லூ' என்றால் சரித்திரத்தில் என்ன? மாவீரன் நெப்போலியன் வீழ்ந்த இடம்

06.01.2022

'இந்திய அரசியல் அமைப்பின் தந்தை' என்று போற்றப்படுபவர் யார்? டாக்டர் அம்பேத்கார்

05.01.2022

ரோகிணி செயற்கைக் கோள் எந்த ஆண்டு ஏவப்பட்டது? 18.07.1980

04.01.2022

தென்னகத்தின் மீது படை எடுத்த இஸ்லாமிய தளபதி யார்? மாலிக்காபூர்

03.01.2022

கிழக்கிந்தியக் கம்பெனியிடம் இருந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு இந்தியா வந்த ஆண்டு எது? 1858

02.01.2022

குதுப்பினார் கட்டடத்தை கட்டி முடித்தவர் யார்? இல்துமிஷ்

01.01.2022

டெல்லி செங்கோட்டையை கட்டியவர் யார்? ஷாஜஹான்