தமிழகத்தின் மாநில மலர் எது? செங்காந்தள் மலர் விளக்கம்:: செங்காந்தள் அல்லது காந்தள் (Gloriosa, இலங்கை வழக்கு: கார்த்திகைப் பூ) என்பது ஒரு காந்தள் பேரினத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டது. இவை இயற்கையாக ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி இலங்கை, இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும்.