ராமேஸ்வரம் கோயில் பிரகாரங்களைச் சுற்றி எத்தனை புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன? இருபத்தி இரண்டு விளக்கம்:: இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. இக்கோயிலின் மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்மன் பெயர் பர்வத வர்த்தினி. மதுரையிலிருந்து கிழக்கே 161 கி., தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையில் ராமேஸ்வரம் எனுமிடத்தில் இராமநாதஸ்வாமி ஆலயம் அமைந்துள்ளது. ராமேஸ்வரம் கோயில் பிரகாரங்களைச் சுற்றி 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.