சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம் , பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான் . அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்ளுங்கள் Ø 108 சக்தி ஸ்தலங்களில் 51 வது ஊர் ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு , பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது . Ø Armed Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி (AVADI) Ø 1912 ம் ஆண்டில் 25 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஆங்கிலேயரால் Chrome Leather Factory என்ற ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையை தொடங்கியதால் அப்பகுதிக்கு குரோம்பேட்டை என்ற பெயர் உருவானது Ø 17,18 ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி . அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால் , கோடா பக் ( பொருள் - Garden of horses) என்று உருது மொழியில் பெயர் வைத்தார் . பின்னாளில் அதுவே கோடம்பாக்கம் ஆக மாறியது . Ø தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி ஆகையால் தென்னம்பேட்...