08.01.2021

ஒரு சிப்பிக்குள் முத்து விளைய, எத்தனை ஆண்டுகள் ஆகும்?

15 ஆண்டுகள்

விளக்கம்::
கடலுக்குள் ஓடுகள் பெற்றுள்ள உயிரினங்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. இவற்றில் ஒன்றுதான் முத்துசிப்பி. சிப்பிகளிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன.5 செ.மீ., முதல் ஒரு மீட்டர் வரை வளரக்கூடியவை.

 சிப்பிகளின் ஓடு இரு பகுதிகளானது. இரு பகுதிகளும் ஓரத்தில் ஓரிடத்தில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அதன் ஓடுகள் திறந்தே இருக்கும்.

 நீரில் இருக்கும் ஆக்சிஜனை கிரகிக்கிறது சிப்பி. அதன் பருவ காலத்தில் கோடிக்கணக்கான முட்டைகளை இட்டுத் தள்ளும்.முட்டையை விட்டு வெளியே வரும்போது சிப்பிக்கு ஓடு இருக்காது.

 அப்போது அதன் உருவம் ஒரு ஊசி முனை அளவே இருக்கும். ஒரு நாள் கழித்தே அதற்கு ஓடு உண்டாகிறது.இரண்டு வாரங்களில் நீந்த தொடங்கும்.

 ஐந்து ஆண்டுகளில் முழு வளர்ச்சி அடையும். மிக நல்ல முத்துக்கள் பாரசீக வளைகுடாவில் தான் கிடைக்கிறது. அரேபியர்கள் கடலில் மூழ்கி முத்து குளிப்பதையே முக்கிய தொழிலாக கொண்டிருக்கின்றனர்.

 சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களிலும் முத்துக்கள் கிடைக்கின்றன. ஒரு சிப்பிக்குள் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகின்றன.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022