22.01.2022
இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லிம் மன்னர் யார்?
முகம்மது பின் காசிம்
விளக்கம்::
இந்தியாவுக்கு எதிரான முதல் முஸ்லிம் படையெடுப்பு கி.பி.711-இல் முகமது பின் காசிம் தலைமையில் நடைபெற்றது, அப்போது அரேபியர்கள் சிந்து மாநிலத்தை வென்று தம் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தனர். பாக்தாத்தில் ஆட்சிபுரிந்த கலீபாவின் ஆணைப்படி நிகழ்ந்த இப்படையெடுப்பு, நிலையான ஆட்சிக்கு வழிகோலவில்லை, தொலைதுரத்திலிருந்து நேரடியாக ஆளுவதில் உள்ள சிரமங்களால் இவ்வாட்சி கி.
பி.ஒன்பதாம் நுற்றாண்டின் மத்தியில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்குப் பின்னர் கி.
பி.1001-இல் இருந்து தொடர்ச்சியாக, பல கடும் படையெடுப்புகளை கஜினி முகமது நடத்தினார். இவர் 1030-ஆம் ஆண்டு இறந்தார்.
ஆனால் முப்பதாண்டு காலக் குறுகிய இடைவெளியில் 17 முறை படையெடுத்தார். இவரையடுத்து 1173-ஆம் ஆண்டு முதல் கோரி முகமதுவின் படையெடுப்புகள் தொடங்கின, இவர் கி.1206-இல் கொல்லப்பட்டார், கஜினி முகமதுவின் 30 ஆண்டுகாலப் படையெடுப்புகளும் இந்தியாவைக் கடுமையாக பாதித்தன.
Comments
Post a Comment