26.01.2022
பாபரின் சுயசரிதையான பாபர் நாமா எந்த மொழியில் எழுதப் பெற்றது?
துருக்கி மொழி
விளக்கம்::
பாபர் நாமா (Baburnama) என்பது முகலாய மன்னர் பாபரின் வாழ்க்கைக் குறிப்புப் புத்தகம் ஆகும். இது சகாடை மொழியில் எழுதப்பட்டது. இந்நூலுக்கு "பாபரின் புத்தகம்" அல்லது "பாபரின் கடிதங்கள்" என்றும் பொருளுண்டு. இந்நூல் பாபரின் நினைவிலிருந்து எழுதப்பட்டது.
பாபரின் காலம் பொதுவருடம் 1483 லிருந்து 1530 வரை. இந்நூலுக்கு பாபர் அதிக கவனமும் சிரத்தையும் எடுத்துக் கொண்டார். வார்த்தை மற்றும் வாக்கிய அமைப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தினார்.
பாரசீக மொழியில் ஆங்காங்கே சில கவிதைகளும் இப்புதகத்தில் இடம் பெறுகின்றன. பாபரின் பேரன் அக்பர் காலகட்டத்தில் இப்புத்தகம் அதன் மூல மொழியிலிருந்து பாரசீக மொழியில் முழுவதும் மொழிபெயர்க்கப்பட்டது.
Comments
Post a Comment