10.03.2021

இந்தியாவின் முதல் செயற்கைக் கோளான ஆரியப்பட்டா எங்கு உருவாக்கப்பட்டது?

பெங்களூர்

விளக்கம்::
ஆரியபட்டா (Aryabhata) என்பது இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆகும். இப்பெயர் புகழ்பெற்ற இந்திய வானியலாளரான ஆரியபட்டா என்பவரின் நினைவாக இச்செய்மதிக்கு சூட்டப்பட்டது. இச்செயற்கைக்கோள் சோவியத் ஒன்றியத்தால் 1975, ஏப்ரல் 19 இல் கப்புஸ்டீன் யார் என்ற இடத்தில் இருந்து கொஸ்மொஸ்-3எம் என்ற ஏவுகலன் மூலம் செலுத்தப்பட்டது. ஆரியபட்டா இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் வானியல் ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்காக அமைக்கப்பட்டது.

 பூமியின் காற்று மண்டலத்தில் இது பிப்ரவரி 11, 1992 இல் மீளவும் வந்தது. இந்தியாவின் முதல் செயற்கைக் கோளான ஆரியபட்டா பெங்களூரில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022