08.03.2021

ஜியோமெட்ரியின் தந்தை' எனப்படும் யூக்ளிட் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

கிரீஸ்

விளக்கம்::
கிரேக்க நாட்டின் அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த யூக்ளிடு அல்லது யூக்கிளிடீசு என்பார் கி.மு. 325 முதல் கி. 265 வரை வாழ்ந்தவர் என அறிஞர்கள் கருதுகின்றனர். இவருடைய வடிவவியல் நூலாகிய எலிமென்ட்ஃசு (Elements) என்பது 2200 ஆண்டுகளுக்கும் மேலாக மாந்தர் இனத்தைப் பெருமளவும் சிந்திக்க வைத்த பெரும் நூலாகும். இதில் 13 பெரும் பாகங்கள் (உள் நூல்கள்) உள்ளன.

 இவருடைய வடிவவியல் நூலின் வழி முதற்கோளாக (axiom) சில கருத்துக்களைக் கொண்டு முறைப்படி நிறுவும் (prove) கணிதவியலை தோற்றுவித்தார் என்று சொல்லலாம். இவருடைய எலிமென்ட்ஃசு என்னும் நூலில் வடிவவியல் மட்டும் இன்றி எண்கணிதத்திலும் பல அருமையான முடிவுகளை கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக நூல் 10ல் 20ஆவது முன் வைப்பில் பகா எண்கள், எண்ணிக்கையில் அடங்காதவை என்று நிறுவியுள்ளார்.

 வடிவயியலில் ஒரு பிரிவு யூக்ளீட் வடிவியல் என்று வழங்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022