09.07.2021
தமிழகத்தின் மாநிலப் பறவை எது?
மரகதப்புறா
விளக்கம்::
தமிழகத்தின் மாநிலப் பறவை மரகதப் புறா. இது தடித்த உருவமுடைய, சராசரியாக 23 முதல் 28 செ.மீ. (10 – 11.
2 இன்ச்) நீளமுள்ள, நடுத்தர அளவுள்ள புறாவாகும். பின்பக்கமும் இறக்கைகளும் பளிச்சென மரகதப் பச்சை நிறத்தில் இருக்கும். பறக்கும்போது, இறகுகளும் வாலும் கருத்தும், பின்பகுதி கருப்பு வெள்ளைப் பட்டைகளுடனும் காணப்படுகின்றது.
இதன் தலையும், கீழ்ப்பகுதிகளும் கிரைசோகுலோரா (chrysochlora) இனத்தில் சிவப்பு நிறத்திலிருந்து (லாங்கிராஸ்டிரிஸ் (longirostris) இனத்தில் மர நிறத்திலிருந்து) மெதுவாகக் கீழ் வயிற்றுப்பகுதியில் பழுப்பு நிறமாக மாறுபட்டுக் காணப்படுகின்றது.கண்கள் கருத்தும், அழகும் கால்களும் சிவந்தும் காணப்படுகின்றது.
Comments
Post a Comment