31.07.2020

'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற வாக்கியம் எந்த நூலில் இடம் பெற்றது?

புறநானூறு

விளக்கம்::
புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை.

பாக்களின் அடி வரையறை 4 அடி முதல் 40 அடி வரை உள்ளன. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. இதனை ஜி.

 யு. போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.இதில் தான் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற வாக்கியம் இடம் பெறுகிறது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022