25.04.2021

தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி இந்தியாவின் எந்த இடத்தில் இருந்து பெறப்படுகிறது?

ஜார்கண்ட்

விளக்கம்::
ஜார்க்கண்ட் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. 2000 ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திலிருந்து ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப் பட்டது. ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகராகும். ஜாம்ஷெட்பூர் (பெரிய நகரம்), பொகாரோ மற்ற முக்கிய நகரங்கள்.

 ஜார்க்கண்டின் அருகில் பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. ஜார்க்கண்ட கனிம வளம் நிறைந்த மாநிலமாகும். ஜார்க்கண்ட் என்பதன் பொருள் காடுகளைக் கொண்ட நிலப்பரப்பு என்பதாகும்.

 தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி இந்தியாவின் இந்த மாநிலத்தில் இருந்தே பெறப்படுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தின் முக்கிய பொருளாதார ஆதாரங்களாக இரும்பு, நிலக்கரி, அலுமினியம் போன்ற கனிமச் சுரங்கங்கள் அதிகமாக உள்ளது. ஜார்கண்ட் மாநிலம் நக்சலைட்-மாவோயிஸ்ட் போராளிகளின் மையமாக உள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit