14.02.2021

பழங்குடி மலைவாழ் மக்கள் அதிகமாக உள்ள இந்திய மாநிலம் எது?

மத்தியப் பிரதேசம்

விளக்கம்::
மத்தியப் பிரதேசம் இந்தியாவில் உள்ள மாநிலமாகும். மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபால். இந்தூர், உஜ்ஜயினி, குவாலியர் ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். ஹிந்தி இங்கு பெரும்பான்மையாக பேசப்படும் மொழி ஆகும்.

இந்தியாவின் மத்தியப் பகுதியில் அமைந்ததால் இம்மாநிலம் மத்தியப் பிரதேசம் எனப் பெயர் பெற்றது. மத்தியப் பிரதேசம் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாக விளங்கி வந்தது. 2000ஆம் ஆண்டில் சட்டிஸ்கர் இம்மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப் பட்டதால் இச்சிறப்பை இழந்தது.

 மத்தியப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள் குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், சட்டிஸ்கர், மகாராஷ்டிரம் ஆகியவை. விந்திய மலைத்தொடர் மற்றும் சத்புரா மலைத்தொடர்கள் வட இந்தியாவையும் தென் இந்தியாவையும் பிரிக்கிறது. நர்மதை நதி மத்தியப் பிரதேசத்தின் வழியாகப் பாய்கிறது.

 பழங்குடி மலைவாழ் மக்கள் அதிகமாக உள்ள இந்திய மாநிலம் இதுவே என்பது இன்னொரு சிறப்பு.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022