30.06.2020

"தலையாட்டி பொம்மை" என்று சொன்ன மாத்திரத்தில் நினைவுக்கு வரும் ஊர் எது?

தஞ்சாவூர் 

விளக்கம்:
"தலையாட்டி பொம்மை" என்று சொன்ன மாத்திரத்தில் நினைவுக்கு வரும் ஊர் "தஞ்சாவூர்" தான்.
தஞ்சாவூர் மாநகரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்டத் தலைநகரமாகும்.தஞ்சை என்றும் அழைக்கப்படுகிறது. தஞ்சை என்பதற்கு "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி" என்று பொருள். தஞ்சாவூர் எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையரின் பெயரையே இந் நகரம் பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றது என்றும் கூறப்படுகிறது. இந்த ஊர் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்களின் தலைநகரமாய் விளங்கியது. மேலும் உலகப் புகழ் வாய்ந்த பெரிய கோவில் என அழைக்கப்படும் பெருவுடையார் கோயில் அமைந்த மாநகரமும் இதுவே.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit