23.06.2020

"Gateway of Tamilnadu (தமிழ்நாட்டின் நுழைவாயில்)" என்று அழைக்கப்படும் ஊர் எது?

தூத்துக்குடி 

விளக்கம்:
தூத்துக்குடி இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10ஆவது மாநகராட்சியாக ஆகஸ்ட் 5, 2008 இல் அப்போதைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும் உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. தூத்துக்குடி வரலாற்று ரீதியில் முத்துக் குளிப்புக்குப் பெயர் பெற்ற இடமாகும். தூத்துக்குடியில் ஒரு அனல் மின் நிலையமும் ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன. இந்த ஊரை "தமிழ்நாட்டின் நுழைவாயில்" என்றும் அழைப்பார்கள்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022